சென்னை: ஆர்எஸ்எஸின் கொள்கை வரைவு திட்டங்களில் ஒன்றான தற்போதைய திமுக அரசு அறிவித்துள்ள இல்லம் தேடி கல்வி திட்டம் என்று இந்திய தேசிய லீக் கவலை தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்.எஸ்.எஸ். பாராட்டும் கல்விக் கொள்கையை தமிழக அரசு கொள்கை திட்டமாக கொண்டு வருவது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது இந்திய தேசிய லீக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.


ஆர்எஸ்எஸின் கொள்கை வரைவு திட்டங்களில் ஒன்றான தற்போதைய திமுக அரசு அறிவித்துள்ள இல்லம் தேடி கல்வி திட்டம் வழிவகுக்கும் சந்தேகம் தெரிவிப்பதாகக் கூறும் இந்திய தேசிய லீக் கட்சி, சமக்ர சிக்ஷா, வித்யாஞ்சலி போன்ற மத்திய அரசின் கல்வி திட்டத்தின் மறுபதிப்பு தான் இல்லம் தேடி கல்வித் திட்டம் என்று கூறுகிறது.


இந்த கருத்தை பெரும்பாலான கல்வியாளர்கள் முதல் கொண்டு அரசியல் தலைவர்கள் வரை கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பான எதிர்ப்புகளை தமிழக முதல்வர் கண்டு கொள்ளாதது ஏன் என்று கேள்வி எழுப்புகிறது.


இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதை தமிழக முதலமைச்சர் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி கூறுகிறது. ஏனென்றால், தமிழக அரசு நியமிக்க உள்ள தன்னார்வலர்களர்களில் 90 % சதவீதத்தினர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Alsos Read | 400 ஆண்டுகள் பழமையான நிருத்ய விநாயகர் சிலை கடத்தல் முறியடிப்பு


தன்னார்வலர்களின் வயது குறைந்த பட்சம் 17 என தமிழக அரசு குறிபிட்டுள்ளதே பாலியல் தவறுகளுக்கு காரணமாக அமையும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது என்று இந்திய தேசிய லீக் கட்சி கூறுகிறது.


இதுவரை இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பான அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, பணி செய்ய முன்வந்து உள்ள தன்னார்வலர்கள் எண்ணிக்கை சுமார் 86 ஆயிரத்து 550. இதில் இளைஞர்களே அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.


86 ஆயிரத்து 550 நபர்களில் ஆர்எஸ்எஸ் பாசிச சிந்தனை உள்ளவர்கள் எத்துனை ஆயிரம் பேர் ஊடுருவி இருப்பார்கள் என்ற கேள்வி முஸ்லீம் சமுதாயத்திற்கு எழுகிறது. 
இத்திட்டத்தின் மூலம் பொது சமூகத்திற்கு அதிக பாதிப்பு என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இதன் மூலம் இருக்கும் என்பதையும் நாம் மறுக்க முடியாது. குறிப்பாக இஸ்லாமியர் வீடுகளில் தன்னார்வலர்கள் என்ற போர்வையில் சம்பந்தமில்லாத ஆர்எஸ்எஸ் பாசிச சிந்தனை உள்ள நபர்கள் ஊடுருவி முஸ்லிம் குடும்பங்களை சீரழிக்க அதிக வாய்ப்பு உள்ளது.


தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் சாதி-மத சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். ஆகையால் தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் எனக்  கோருகிறோம் என்று இந்திய தேசிய லீக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ALSO READ | ஸ்தம்பித்தது சென்னை! நீண்ட நேரம் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR