JEE Main 2021 முக்கிய அறிவிப்பு: இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
IIT உள்ளிட்ட உயர் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான JEE Main 2021 தேர்வு, இந்த ஆண்டு, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய நான்கு மாதங்களில் நடத்தப்படும்.
பொறியியல் நுழைவுத் தேர்வான JEE Main 2021 பற்றிய முக்கிய அறிவிப்பு jeemain.nta.nic.in -இல் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA), JEE Main 2021 குறித்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சரின் பரிந்துரைத்தபடி பிப்ரவரி 2021 இல் JEE Main 2021தேர்வுகள் நடத்தப்படும்.
முழுமையான அட்டவணையை கீழே காணலாம். JEE Main 2021 தேர்வுகளுக்கான பதிவு இன்று, அதாவது 2020, டிசம்பர் 15 முதல் துவங்குகிறது.
விரைவான குறிப்புக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இங்கு வழங்கப்படுகிறது. JEE Main 2021-ன் விண்ணப்பப் படிவம் இன்று jeemain.nta.nic.in -இல் ஆக்டிவேட் செய்யப்படும். முழுமையான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JEE Main 2021: பிப்ரவரி அட்டவணை
Event | Date |
Online Registration for February 2021 Exam | December 15, 2020 |
Last date to fill online application form on jeemain.nta.nic.in | January 15, 2021 |
Last date for successful transaction of prescribed application fee | January 16, 2021 |
Correction in particulars | January 18, 2021 - January 21, 2021 |
Downloading of Admit Cards from NTA website | First week of February, 2021 |
Date of Examination | 22-25 February, 2021 |
Answer Keys, Result Dates | To be notified later |
JEE Main 2021: பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IIT உள்ளிட்ட உயர் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான JEE Main 2021 தேர்வு, இந்த ஆண்டு, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய நான்கு மாதங்களில், அதாவது நான்கு முறை நடத்தப்படும். மாணவர்கள் ஒரு முறையோ அல்லது நான்கு முறைகளுமோ இந்த தேர்வை எழுதலாம். இவ்வாண்டு மாணவர்கள் இத்தனை முறைதான் எழுத வேண்டும் என்ற எந்த வரம்பும் இல்லை. மாணவர்கள் ஒரு முறையோ அல்லது நான்கு மாதங்களில் நடக்கும் நான்கு தேர்வுகளிலுமோ பங்கு கொள்ளலாம்.
ALSO READ: அடுத்த கல்வி ஆண்டில் JEE தேர்வு 4 முறை நடத்தப்படும்: ரமேஷ் போக்ரியால்!
இருப்பினும், முந்தைய ஆண்டுகளைப் போலவே, JEE Main 2021 தர வரிசையைக் கணக்கிட மாணவரின் மிகச்சிறந்த JEE Main NTA மதிப்பெண் கருதப்படும். அதாவது, ஒரு மாணவர் நான்கு முறையும் தேர்வை எழுதியிருந்தால், அந்த நான்கு முறைகளில், எந்த தேர்வில் அவருக்கு அதிகபட்ச மதிப்பெண் வந்துள்ளதோ அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தேர்வுகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள், அவர்கள் கலந்துகொள்ளப்போகும் அனைத்து மாதங்களுக்கும் தேர்வு படிவத்தை நிரப்ப வேண்டும்.
அறிவிப்பின்படி, 'ஒரு முறை செலுத்தப்பட்ட கட்டணம் திருப்பித் தரப்படாது. இருப்பினும், அந்த கட்டணம் JEE Main 2021 இன் மற்றொரு அமர்வுக்கு மாற்றப்படலாம். ஒரே அமர்வுக்கு ஒரு மாணவர் பல விண்ணப்ப படிவங்களை சமர்ப்பித்தால், அது ஏற்றுக்கொள்ளப்படாது.
ALSO READ: NEET 2021 ரத்து செய்யப்படுமா? மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அளித்த பதில் என்ன
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR