JEE Main Exam News: இந்த ஆண்டிற்கான ஜேஇஇ (JEE) மெயின் தேர்வுகளுக்கான தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

JEE மெயின் தேர்வுகள் ஏப்ரல் 21ம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ம் தேதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


தற்போது நுழைவுத் தேர்வுகள் ஒத்தி போடப்பட்டுள்ளன. மே நான்காம் தேதியன்று ஜேஇஇ மெயின் தேர்வு தொடங்கும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.


பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வான ஜேஇஇ மெயின் 2021 தோ்வு இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப நடைமுறை தொடங்கின


சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான இறுதித் தேர்வுகளுக்கான தேதியுடன், ஜேஇ இ மெயிர் தேர்வின் அமர்வு 1 நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இரு தேர்வுகளும் ஒரே நாளில் வருவதால் மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை கருத்தில் கொண்டு தேரிய தேர்வு முகமை தற்போது நுழைவுத் தேர்வை ஒத்திப் போட்டுள்ளது. 


இது தொடர்பாக என்.டி.ஏ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜேஇஇ முதன்மை தேர்வு 2022இன் அமர்வு 1, ஏப்ரல் 21, 24, 24, 29 மற்றும் மே 1, மே 4 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் குறித்து ஏப்ரல் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் என்.டி.ஏ தெரிவித்துள்ளது.


மேலும் திருத்தபப்ட்ட அட்டவணையின்படி, மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்களை ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ஆன்லைன் தேர்வு மோசடி! ரஷ்ய ஹேக்கர்களின் சாமர்த்தியம்


மேலும் படிக்க | 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR