Breaking! Class 12 Exams:மத்தியப்பிரதேசத்திலும் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து
தற்போதைய கோவிட் -19 நிலைமையைக் கருத்தில் கொண்டு, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் 2021, ரத்து செய்யப்படுகிறது
Board Exam 2021: நாடு முழுவதும் தொடர்ந்து 12ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. சிபிஎஸ்இ +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக நேற்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இன்று குஜராத் மாநில அரசு 12ஆம் வகுப்பு தேர்வுகளை அறிவிப்பதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநில அரசும், மாநில வாரியம் நடத்தும் +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற மாநில அரசும் முடிவு செய்துள்ளது.
தற்போதைய கோவிட் -19 நிலைமையைக் கருத்தில் கொண்டு, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் 2021, ரத்து செய்யப்படுகிறது. இந்த முடிவை மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் புதன்கிழமை அறிவித்தார்.
Also Read | பிளஸ் டூ தேர்வு: 2 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் இயல்பு வாழ்க்கையை மாற்றியது. அது மாணவர்களின் கல்வியையும் ஆன்லைனுக்கு மாற்றியது. தேர்வுகளும் நடத்தமுடியாத சூழ்நிலையில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
நாடு முழுவதும் கொரோனா தொற்று (Coronavirus) பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில், மாணவ-மாணவிகளின் நலன் தான் முக்கியம். மிகவும் நெருக்கடியான இந்த கால கட்டத்தில், மாணவர்கள் தேர்வுகளை எழுதி நிர்பந்திக்கப்படக் கூடாது எனத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி +2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசும் இது தொடர்பாக அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுதொடர்பாக விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது நடக்கும்? பதிலளித்தார் தமிழக கல்வி அமைச்சர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR