Board Exam 2021: சிபிஎஸ்இ +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக நேற்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இன்று குஜராத் மாநில அரசு 12ஆம் வகுப்பு தேர்வுகளை அறிவிப்பதாக அறிவித்துள்ளது
நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Gujarat Secondary and Higher Secondary Education Board cancels class 12th board examination, says State Education Minister Bhupendrasinh Chudasama pic.twitter.com/IDXjzPdl1g
— ANI (@ANI) June 2, 2021
பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஒவ்வொரு மாநில கல்வித்துறை அதிகாரிகளும் கலந்தாலோசித்து தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். தற்போது குஜராத் மாநில அரசு 12ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
Also Read | பிளஸ் டூ தேர்வு: 2 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் இயல்பு வாழ்க்கையை மாற்றியது. அது மாணவர்களின் கல்வியையும் ஆன்லைனுக்கு மாற்றியது. தேர்வுகளும் நடத்தமுடியாத சூழ்நிலையில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
நாடு முழுவதும் கொரோனா தொற்று (Coronavirus) பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில், மாணவ-மாணவிகளின் நலன் தான் முக்கியம். மிகவும் நெருக்கடியான இந்த கால கட்டத்தில், மாணவர்கள் தேர்வுகளை எழுதி நிர்பந்திக்கப்படக் கூடாது எனத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி +2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசும் இது தொடர்பாக அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுதொடர்பாக விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது நடக்கும்? பதிலளித்தார் தமிழக கல்வி அமைச்சர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR