NEET Exam: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு; மாணவர்களுக்கு என்ன அனுமதி?
நாடு முழுவதும் 3862 மையங்கள் அமைக்கப்பட்டு நீட் தேர்வை எழுத 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
நாடு முழுதும் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., - சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி போன்ற, மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு (NEET EXAM 2021) இன்று நடைபெறுவதை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டு நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக நாடு முழுவதும் 3862 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வை எழுத 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ALSO READ | நீட் தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள 1,12,889 பேரில் 11236 மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் இருந்து விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 18 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.
மாணவர்களுக்கு அனுமதி என்ன? கட்டுப்பாடுகள் என்ன?
* தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு எண்.95 முகக் கவசம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக அதாவது மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
* தேர்வறைகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.
* ஹால் டிக்கெட், அடையாள அட்டை, புகைப்படம், 50 மில்லி லிட்டர் சானிடைசர் பாட்டில், குடிநீர் பாட்டில் தவிர மின்னணு சாதன பொருட்கள், கைகடிகாரம், கைப்பைகள், ஆபரணங்கள் உள்ளிட்ட வேறு எதையும் தேர்வு மையத்துக்குள் எடுத்து செல்ல கூடாது.
* தேர்வர்கள் வெளிர்நிற அரைக்கை ஆடைகளையே உடுத்த வேண்டும்
* ஷு அணியக் கூடாது
* தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளின் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு பரிசோதிக்கப்படும்.
* மின்னணு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. உட்பக்கம் தெளிவாக தெரியும் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லலாம். 50 மி.லி. சானிடைசர் எடுத்துச் செல்லலாம்.
ALSO READ | நீட் தேர்வு முறையில் மாற்றம், இண்டர்னல் சாய்ஸ் உண்டு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR