நீட் யு.ஜி 2022 இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகயுள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நாட்டின் 546 நகரங்களில் ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ஆம் தேதி புதன்கிழமை வெளியாகிறது. இந்த முடிவுகள் என்.டி.ஏ அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in இல் சரிப்பார்க்கலாம். இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தேர்வு எப்போது நடைபெற்றது?
ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ நுழைவுத் தேர்வில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தேர்வெழுத முடியாமல் போனவர்களுக்கு செப்டம்பர் 4 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது. அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 497 நகரங்களில் அமைக்கப்பட்ட 3,570 மையங்களில் நடந்தது. இந்தத் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் அதிகபட்சமாக ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மேற்கு சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.


மேலும் படிக்க | மருந்தாளுநர் பணிக்கான வாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்


நீட் தேர்வு முடிவுகள்
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள், செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அறிவித்தது. அதற்கேற்ப நீட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு, தேர்வர்களின் ஓஎம்ஆர் விடைத்தாள் நகல்கள் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விவரங்களை https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


MBBS/BDS/BAMS/BSMS/BUMS/BHMS சேர்க்கைக்கான நீட் தேர்வு 13 மொழிகளில் நடத்தப்பட்டது. அபுதாபி, பாங்காக், கொழும்பு, தோஹா, காத்மாண்டு, கோலாலம்பூர், லாகோஸ், மனாமா, மஸ்கட், ரியாத், ஷார்ஜா, சிங்கப்பூர், துபாய் மற்றும் குவைத் நகரங்களில் முதன்முறையாக இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்தியா தவிர 14 நகரங்களில் தேர்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த ஸ்டெப்ஸ் மூலம், நீங்கள் நீட் யுஜி 2022 தேர்வு முடிவு பதிவிறக்கம் செய்ய முடியும்.


ஸ்டெப்  1. முதலில், மாணவர்கள் என்டிஏ நீட் இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in க்குச் செல்லவும்.


ஸ்டெப் 2. இதற்குப் பிறகு, முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள நீட் யுஜி 2022 முடிவுக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.


ஸ்டெப் 3. இப்போது தேவையான நற்சான்றிதழ்களை பூர்த்தி செய்து சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.


ஸ்டெப் 4. இதற்குப் பிறகு உங்கள் முடிவு உங்கள் திரையில் தோன்றும்.


ஸ்டெப் 5. நீங்கள் உங்கள் முடிவைப் பதிவிறக்கம் செய்து அதன் பிரிண்ட் அவுட்டை எடுத்து எதிர்காலத்திற்காக உங்களுடன் வைத்திருக்க வேண்டும்.


மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ