இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதற்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசியத் தேர்வு முகமை அறிவித்து இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு, நீட் தேர்வு அடிப்படையில் தான், மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதனால், மருத்துவ படிப்பில் சேர விரும்புவோர், நீட் தேர்வு எழுதுவது கட்டாயம். இந்த தேர்வில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து, 1.42 லட்சம் பேர் உட்பட, நாடு முழுதும் இருந்து, 18.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 


மேலும் படிக்க | அஞ்சல் துறையில் 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு


அத்துடன் நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களில் இருக்கும் மையங்களில் நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. அதேபோல் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடத்தப்பட இருப்பதாக தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவித்து உள்ளது. இந்நிலையில் தற்போது நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் யுஜி 2022க்கான நுழைவுச் சீட்டை அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


நீட் யுஜி 2022 தேர்வு தேதி, நேரம்
நீட் 2022 கல்விக் காலண்டரின் படி, நீட் யுஜி 2022 தேர்வு ஜூலை 17, 2022 அன்று நடத்தப்படும். நாடு முழுவதும் 546 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் அமைந்துள்ள பல்வேறு மையங்களில் தேர்வு நடத்தப்படும். மதியம் 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


நீட் யுஜி 2022 அட்மிட் கார்டு 2022 ஐப் பதிவிறக்குவது எப்படி


அட்மிட் கார்டு வழங்கப்பட்டவுடன், அனைத்து விண்ணப்பதாரர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டெப்ஸை பின்பற்றி அட்மிட் கார்டைப் பதிவிறக்கலாம்-


* முதலில் நீட் என்.டி.ஏ இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in ஐப் பார்வையிடவும்.
* இப்போது முகப்புப் பக்கத்தில், 'Download Neet UG 2022 Admit Card 2022' என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
* இப்போது ஒரு புதிய வலைப்பக்கம் திறக்கும்.
* விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்ற தேவையான உள்நுழைவு சான்றுகளை உள்ளிடவும்.
* உங்கள் நீட் யுஜி 2022 அட்மிட் கார்டு திரையில் காட்டப்படும்.
* அட்மிட் கார்டை டவுன்லோட் செய்து எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.


மேலும் படிக்க | டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR