புதுடெல்லி: 2023 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ மெயின் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பணிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களின் உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வு ஜே.இ.இ தேர்வுகள். பொறியியல் தொழில்நுட்ப படிப்புகளுக்கு பெயர் பெற்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி போன்றவற்றில் உள்ள படிப்புகளில் சேர்வதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு இது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வு 2 கட்டங்களாக, JEE Main, Advanced என பிரித்து நடத்தப்படுவது வழக்கம். ஆங்கில மொழியைத் தவிர தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, ஒடிசா, தெலுங்கு, உருது, தமிழ், இந்தி, ஆங்கிலம், குஜராத்தில் என பிராந்திய மொழிகளிலும், இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.


மேலும் படிக்க | உடல் பருமனை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான தந்திரம்


என்.டி.ஏ எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்தத் தேர்வு வழக்கமாக ஜூன் மாதத்தில் நடைபெறும். கடந்த  ஆண்டில், ஜேஇஇ தேர்வுக்கான முதல் அமர்வு 2022 ஜூன் 20 முதல் 29 ஆம் தேதி வரையும், இரண்டாவது அமர்வு 2022 ஜூலை 21 முதல் ஜூலை 30 ஆம் நாள் வரை நடைபெற்றது.


அதே நடைமுறையை பின்பற்றி, இந்த 2023 ஆம் ஆண்டிற்கான ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் மாதம் 3 ஆவது வாரத்தில் தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் இரண்டு கட்டமாக தேர்வுகள் நடைபெற உள்ளது. அதன் படி, இதன் முதல் அமர்வு ஜனவரி மாதத்திலும், இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதத்திலும் நடைபெற உள்ளது.


இந்த இரண்டு கட்டத் தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்படும். மாணவர்கள், தரவரிசைப் படி கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். https://jeemain.nta.nic.in/ என்ற இணையதள முகவரியில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


மேலும் படிக்க | நவம்பர் மாதம் முதல் மாறும் விதிமுறைகள்! ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ