NEET UG Result 2022 Declared: வெளியான நீட் தேர்வு ரிசல்ட்; எந்த மாநிலம் முதலிடம்?

NEET UG முடிவுகள் 2022 neet.nta.nic.in இல் வெளியிடப்பட்டது: தேசிய தேர்வு முகமை, NTA NEET தேர்வு 2022 முடிவுகளை 7 செப்டம்பர் 2022 அன்று வெளியிட்டுள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 8, 2022, 08:55 AM IST
  • நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு
  • டாப் 50 பட்டியலில் தமிழகத்திலிருந்து இருவர்
  • எந்த மாநிலம் முதலிடம்
NEET UG Result 2022 Declared: வெளியான நீட் தேர்வு ரிசல்ட்; எந்த மாநிலம் முதலிடம்? title=

நீட் யு.ஜி 2022 இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது. இந்த முடிவுகள் என்.டி.ஏ அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in இல் சரிப்பார்க்கலாம். மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நாட்டின் 546 நகரங்களில் ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர்.

இந்த தேர்வு எப்போது நடைபெற்றது?
ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ நுழைவுத் தேர்வில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தேர்வெழுத முடியாமல் போனவர்களுக்கு செப்டம்பர் 4 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது. அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 497 நகரங்களில் அமைக்கப்பட்ட 3,570 மையங்களில் நடந்தது. இந்தத் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் அதிகபட்சமாக ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மேற்கு சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

நீட் தேர்வு முடிவுகள்
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள், செப்டம்பர் 7 ஆம் தேதி நள்ளிரவு வெளியானதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அறிவித்தது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in ஐப் பார்த்து பதிவிறக்கம் செய்யலாம். இங்கே நீங்கள் நேரடி இணைப்பைப் பார்க்கலாம் மற்றும் கீழே உள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து முடிவைப் பதிவிறக்குவதற்கான படிகளைப் பார்க்கலாம்.

நீட் 2022 முடிவு இணைப்பை இங்கே பார்க்கவும்- NEET UG முடிவுகள் 2022 நேரடி இணைப்பு: இங்கே பார்க்கவும். 

இந்த தேர்வில் ராஜஸ்தானை சேர்ந்த தனிஷ்கா 715 மதிப்பெண்களுடன் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 17.64 லட்சம் பேர் தேர்வை எழுதியதில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 56.30 சதவீதம் பேர் இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அதேபோல் தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதியவர்களில் 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவர் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 30-வது இடமும், ஹரிணி 702 மதிப்பெண் பெற்று 43-வது இடத்தையும் பிடித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டினை விட தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. 

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 108 மதிப்பெண்ணிலிருந்து 93 ஆக குறைந்துள்ளது.

இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியவர்களில் உத்தரபிரதேசம் மற்றும் மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்து இருப்பதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. 

இந்த ஸ்டெப்ஸ் மூலம், நீங்கள் நீட் யுஜி 2022 தேர்வு முடிவு பதிவிறக்கம் செய்ய முடியும்.

ஸ்டெப் 1. முதலில், மாணவர்கள் என்டிஏ நீட் இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in க்குச் செல்லவும்.

ஸ்டெப் 2. இதற்குப் பிறகு, முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள நீட் யுஜி 2022 முடிவுக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 3. இப்போது தேவையான நற்சான்றிதழ்களை பூர்த்தி செய்து சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 4. இதற்குப் பிறகு உங்கள் முடிவு உங்கள் திரையில் தோன்றும்.

ஸ்டெப் 5. நீங்கள் உங்கள் முடிவைப் பதிவிறக்கம் செய்து அதன் பிரிண்ட் அவுட்டை எடுத்து எதிர்காலத்திற்காக உங்களுடன் வைத்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News