SC on NEET: ஓபிசி மற்றும் EWS இடஒதுக்கீட்டுடன் இந்த ஆண்டு நீட் சேர்க்கைக்கு அனுமதி
ஓபிசி மற்றும் EWS இடஒதுக்கீட்டுடன் இந்த ஆண்டு நீட் சேர்க்கைக்கு அனுமதி அளித்து மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி: மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் நல்ல செய்தியைக் கொடுத்திருக்கிறது. இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கை இடஒதுக்கீட்டு வழிமுறைகளை பின்பற்றி நடைபெறும்.
ஓபிசி மற்றும் EWS இடஒதுக்கீட்டுடன் இந்த ஆண்டு நீட் சேர்க்கைக்கு அனுமதி அளித்து மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
PG & UG கவுன்சிலிங்கை 27% OBC மற்றும் 10% EWS இடஒதுக்கீட்டுடன் அனுமதித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். பொருளாதார ரீதியாக ப்பிந்தங்கிய பிரிவினருக்கு (EWS) க்கு 8 லட்சம் வரம்பு வழக்கம் போல் தொடரும். EWS அளவுகோல் இறுதி செல்லுபடியாகும் தன்மை தொடர்பாக இந்த ஆண்டு மார்ச் 3ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் இறுதி செய்யும் என்று நீதிபதி தெரிவித்தார்.
இதற்கிடையில், தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்டமசோதா கிடப்பில் உள்ளது தொடர்பாக மாநில அரசு மும்முரமாக செயல்பட்டுவருகிறது. இந்த விவகாரம் குறித்து எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ALSO READ | NEET vs Counseling: நீட் எழுதிய மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் கவுன்சிலிங்
இது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் நாளை (ஜனவரி 8, 2022) நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில் (Neet Entrance Exam) இருந்து தமிழகத்துக்கு விலக்குகோரும் சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டதை சுட்டிக் காட்டினார்.
ஆனால், அந்த சட்ட மசோதா மீது ஆளுநர் எந்தவித முடிவையும் எடுக்கவில்லை என்பதை குறிப்பிட்ட முதலமைச்சர், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழு, குடியரசுத் தலைவரின் அலுவலகத்தில் மனு வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இதுதொடர்பாக பேச உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுத்ததாகவும், இதன் அடிப்படையில் நாளை சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவிருப்பதாக தமிழக முதல்வர் தெரிவித்தார்.
ALSO READ | நீட் தேர்வு குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR