புதுடெல்லி: கொரோனா (Corona) காலத்தில் சுமார் 6 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், பல விதிமுறைகளுடன் செப்டம்பர் 21 முதல் பள்ளிகள் (Schools) திறக்கப்பட உள்ளன. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 9 முதல் 12 ஆம் அவகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஆசிரியரிடம் ஆலோசனை பெற பள்ளிக்கு செல்ல முடியும். இதற்காக, பெற்றோரின் எழுத்துப்பூர்வ அனுமதி தேவைப்படும். எந்தப் பள்ளியும் குழந்தைகள் பள்ளிக்கு வர வெண்டும் என அவர்களை கட்டாயப்படுத்த முடியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா நாம் வாழும் முறையை பல விதத்தில் மாற்றியமைத்துள்ளது. அதேபோல் பள்ளிகளும் அவற்றின் உள்கட்டமைப்பை மாற்றியுள்ளன. கொரோனாவுக்கு எதிராக போராடவும், முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும் பள்ளிகள் முழுமையாக தயாராக உள்ளன.


கொரோனா காலத்தில் பள்ளிகள் எப்படி இருக்கும்


- பள்ளிகள் இதற்கான பல ஏற்பாடுகளைச் செய்துள்ளன. குழந்தைகள் நுழைவு வாயிலிலிருந்து உள்ளே வரும் முன், ஸ்க்ரீனிங் (Screening) செய்யப்படுவார்கள். அதன் பிறகு அவர்களின் காலணிகள் சுத்தப்படுத்தப்படும்.


- குழந்தைகள் உள்ளே வரவும் வெளியேறவும் வெவ்வேறு வழிகள் உருவாக்கப்படும். இந்த வழிகளில் தனி மனித இடைவெளிக்கான (Social Distancing)  குறிகள் போடப்பட்டிருக்கும்.


- மாணவர்களை தொற்றுநோயிலிருந்து காப்பாற்ற, பள்ளிகள் முற்றிலும் ‘touch-free’-யாக இருக்கும். டச்-ஃப்ரீ வாஷ் பேசின்கள் பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ளன. அத்துடன் தொடத் தேவை இல்லாத சேனிடைசர்களும் வைக்கப்படும்.


- இது மட்டுமல்லாமல், இப்போது மாணவர்களின் வருகைப் பதிவும், அதாவது அடெண்டன்சும், ‘touch-free’-யாக இருக்கும். இதற்காக, ஒரு சிறப்பு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. அதில் ஒரு நேரத்தில் வருகை, வெப்ப திரையிடல் மற்றும் முகக்கவச சோதனை அனைத்தும் செய்யப்படும். மாணவர் முகக்கவசம் அணியவில்லை என்றால், இந்த இயந்திரம் அதையும் சொல்லும்.


பள்ளிகளில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்


- வகுப்பில் உட்கார பெஞ்சுகள் வெகு தொலைவில் வைக்கப்பட்டிருக்கும்.  ஒரே நேரத்தில் ஒரு பெஞ்சில் ஒரு மாணவர் மட்டுமே அவர முடியும். மாணவர்களின் இருக்கைகள் நிர்ணயிக்கப்படும்.


- வகுப்பு அறைகளுடன் ஆசிரியர்களும் மாறிய வடிவில் காணப்படுவார்கள். அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக ஃபேஸ் ஷீல்டுகளை அணிய வெண்டும்.


- மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப விரும்பாத பெற்றோர்கள், வீட்டிலிருந்து மாணவர்களை நேரடி வகுப்புகளைக் காண வைக்கலாம். வகுப்பறைகள் அவ்வப்போது சுத்திகரிக்கப்படும்.


ALSO READ: தேர்வுகளை நடத்த திருத்தப்பட்ட SOP-ஐ வெளியிட்டது சுகாதார அமைச்சகம்: விவரம் உள்ளே!!


பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்கள் என்ன


- கொரோனாவின் ஆபத்து நீங்காத வரையிலும், அரசாங்கத்திடமிருந்து எந்த அறிவுறுத்தலும் வராத வரையிலும், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஆன்லைனில் படிப்பார்கள்.


- செப்டம்பர் 21 முதல், கட்டுப்பாட்டு மண்டலத்திற்கு வெளியே உள்ள பள்ளிகள் மட்டுமே திறக்கப்படும்.


- கட்டுப்பாட்டு மண்டலத்திற்கு (Containment Zones) வெளியே வசிக்கும் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்.


- பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெறுவது கட்டாயமாகும். பள்ளிக்கு வரும் மாணவர்கள் எந்த வகையிலும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். அவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே அவர்களது வருகை இருக்கும்.


- மாணவர்களிடையே குறைந்தது 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். இது தவிர, முகக்கவசம் / முகமூடி (Face Nask) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது பயோமெட்ரிக் வருகைப் பதிவு இருக்காது.


- பள்ளியின் உள்ளே, மாணவர்கள் அவ்வப்போது கைகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும். வளாகத்தில் துப்புவது தடைசெய்யப்பட்டுள்ளது.


- ஒவ்வொரு மாணவர் மற்றும் ஊழியர்களின் வெப்ப பரிசோதனை வாயிலில் செய்யப்படும். அவர்களின் கைகளும் வாயிலிலேயே சுத்தப்படுத்தப்படும்.


- மாணவர்கள் தங்களின் பேனாக்கள், பென்சில்கள், நோட்புக்குகள் அல்லது வேறு எந்த பொருட்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.


- கூடுதலாக, பள்ளி மைதானத்தில் எந்தவொரு விளையாட்டு அல்லது உடல் பயிற்சி செயல்பாடுகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.


- பள்ளிக்கு வரும் அனைத்து மக்களும் ஆரோக்ய சேது செயலியை (Arogya Sethu App) தங்கள் ஃபோனில் வைத்திருப்பது கட்டாயமாகும். இதனுடன், அனைத்து பள்ளிகளும் தங்கள் வளாகத்தில் பல்ஸ் ஆக்சிமீட்டரை (Pulse Oximeter) வைத்திருக வேண்டும். 


ALSO READ: பயங்கரமான நிலை.....நாட்டின் அனைத்து பதிவுகளையும் முறியடித்தது கொரோனா வைரஸ்!