SSC Recruitment: 24,369 கான்ஸ்டபிள் பணிகளுக்கான வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க ரெடியா?
SSC Recruitment 2022: எஸ்.எஸ்.சி கான்ஸ்டபிள் பதவிகளுக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி என்ன தெரியுமா? 24,369 இடங்கள் காலியாக உள்ளன
பணியாளர் தேர்வு ஆணையம் SSC கான்ஸ்டபிள் GD ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுமார் 24,369 இடங்கள் காலியாக உள்ளன. எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), இந்தோ திபெத்திய எல்லைக் காவல் (CRPF), ITBP, Sashastra Seema Bal (SSB), செயலகப் பாதுகாப்புப் படை (SSF), ரைபிள்மேன் (பொதுப் பணி) அஸ்ஸாம் ரைபிள்ஸ் (AR) மற்றும் சிப்பாய் NCB (நர்கோடிக்ஸ் கட்டுப்பாட்டுப் பணியகம்) போன்ற பல்வேறு படைகளில் ஆண்டுதோறும் காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தை தேர்வை பணியாளர் தேர்வு ஆணையம் நடத்துகிறது.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் SSC GD கான்ஸ்டபிள் பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 2022 30 நவம்பர். கான்ஸ்டபிள் பதவிகளுக்கான காலியிடங்கள், தேர்வு செயல்முறை, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்ப கட்டணம் மற்றும் SSC GD கான்ஸ்டபிள் தேர்வு தேதிகள் பற்றிய தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.
பதவியின் பெயர்: கான்ஸ்டபிள் (பொதுப் பணி)
அறிவிப்பு வெளியிடப்பட நாள் : 27/10/2022
காலியிடங்களின் எண்ணிக்கை: 24369
பணியிடம்: இந்தியா முழுவதும்
மேலும் படிக்க | மாதம் ரூ.92,000 சம்பளத்தில் ESIC-ல் வேலைவாய்ப்பு!
SSC கான்ஸ்டபிள் GD ஆட்சேர்ப்பு 2022க்கான முக்கியமான தேதிகள்:
விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்திற்கான தேதி மற்றும் நேரம் அட்டவணையில் உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை காலக்கெடுவிற்குள் அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். காலக்கெடுவிற்குப் பிறகு, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.
SSC கான்ஸ்டபிள் GD ஆட்சேர்ப்பு 2022 காலியிட விவரங்கள்:
இந்திய அரசின் பல்வேறு படைகளில் SSC கான்ஸ்டபிள் GD 2022க்கான காலியிடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கீழே உள்ள காலியிட விவரங்களை சரிபார்க்கவும். ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் இருவரும் GD கான்ஸ்டபிள் பதவிகளுக்கு தகுதியானவர்கள். ஒட்டுமொத்த காலியிடங்கள் இவை...
SSC GD கான்ஸ்டபிள் சம்பளம்:
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கீழே உள்ள ஊதிய நிலையின்படி மாதாந்திர அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். சம்பள விவரங்களை சரிபார்க்கவும்.
SSC GD கான்ஸ்டபிள் வயது வரம்பு 2022 (01/01/2023 அன்று):
விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்புக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 02/01/2000 க்கு முன்னதாகவும் 01/01/2005 க்குப் பிறகும் பிறந்திருக்கக் கூடாது.
வயது தளர்வு:
SSC GD கான்ஸ்டபிள் 2022க்கான அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு பின்வருமாறு
விண்ணப்பக் கட்டணம்:
BHIM UPI, நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம் அல்லது விசா, மாஸ்டர்கார்டு, மேஸ்ட்ரோ, ரூபே கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி அல்லது எஸ்பிஐ சலானை உருவாக்குவதன் மூலம் எஸ்பிஐ கிளைகளில் பணமாகச் செலுத்தலாம்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / பல்கலைக்கழகத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் அல்லது 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
தேர்வு செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி ஐந்து நிலைகளின் அடிப்படையில் இருக்கும்.
கணினி அடிப்படையிலான தேர்வு (CBE)
உடல் திறன் சோதனை (PET)
உடல் தரநிலை சோதனை (பிஎஸ்டி)
மருத்துவத்தேர்வு
ஆவண சரிபார்ப்பு
இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிப்பவர்களின் குடியுரிமை தகுதி: இந்திய குடிமகன், நேபாளம், பூட்டானை சேர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவில் நிரந்தரமாக குடியேறும் நோக்கத்துடன் 1962 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவிற்கு வந்த ஒரு திபெத்திய அகதி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாகிஸ்தான், பர்மா, ஆப்கானிஸ்தான், கென்யா, தான்சானியா, இலங்கை, உகாண்டா, ஜாம்பியா, மலாவி, ஜைர், எத்தியோப்பியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க | 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ