பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனஅதிகார சங்கர்ஷ சங்கதனே (ஜேஎஸ்எஸ்) சார்பில் ஆதர்ஷ் அய்யர் மற்றும் அவரது குழுவினர் தேர்தல் பத்திரம் மூலம் மோசமான முறையில் பணம் பறித்ததாக நிதி அமைச்சர் மீது புகார் தெரிவித்து இருந்தனர். தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து செய்யப்பட்டதால் இந்த கோரிக்கைகளை நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினரான நிர்மலா சீதாராமன், பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அவரை விசாரிக்க மற்றும் எஃப்ஐஆர் பதிவு செய்ய உள்ளூர் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க | இந்தியாவில் பரவும் Mpox குரங்கு அம்மை நோய்! இந்த அறிகுறிகள் இருக்கிறதா?
மேலும் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கூறப்பட்ட சில தீவிரமான புகார்கள் குறித்து போலீசார் அறிக்கை கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இது குறித்து ஆதர்ஷ் அய்யர் பேசுகையில், "நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது நிதியமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி தனது கட்சிக்காக சில வேலைகளை செய்துள்ளார். தேர்தல் பத்திரம் மூலம் சிலரிடம் மிரட்டி பணம் பறித்துள்ளார். தேர்தல் பத்திரத் திட்டம் மூலம் பாஜக அரசு எவ்வளவு நிதிகளை பெற்றுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இது ஒரு மோசடி என்று தெரியும். இந்த தவறான செயலில் நிர்மலா சீதாராமனும், அவரது சக ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) பகிர்ந்துள்ள தகவலின்படி ஒவ்வொரு நிறுவனத்திடம் இருந்தும் எப்படி மிரட்டி பணம் பறித்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது என்று ஐயர் மேலும் கூறியுள்ளார். "நாங்கள் பெங்களூருவில் உள்ள வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு சென்று 15 முதல் 16 புகார்களை அளித்துள்ளோம். ஆனால் இப்போது அவர்கள் ஒரு புகாரில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். நிர்மலா சீதாராமன் மீது உள்ள புகாரை விசாரிக்குமாறு திலக் நகர் காவல் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 2024ல், தேர்தல் பத்திரங்கள் என்ற முறை நியாயமானது அல்ல என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்து, அதனை ரத்து செய்தது. இந்த திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகள் தங்களுக்கு யார் பணம் கொடுத்தார்கள் என்பதை வெளியில் தெரிவிக்க வேண்டாம். இதனால் பெரிய குற்றங்கள் நடைபெறலாம் என்று நீதிமன்றம் ரத்து செய்தது.
ஏப்ரல் 2024ல் பெங்களூருவில் உள்ள நீதிமன்றத்தில் ஜேஎஸ்பி சமர்ப்பித்த புகாரில், நிர்மலா சீதாராமன் தவிர பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, பாஜக கர்நாடக முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல், பிஒய் விஜயேந்திரா மற்றும் ED யின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ரெய்டுகள் மூலம் தொழில் அதிபர்களை சிக்க வைத்து, அவர்களிடம் இருந்து மிரட்டி பணம் பிரித்துள்ளனர் என்று புகார் தெரிவிக்கப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ