SSC recruitment 2022: மத்திய ரிசர்வ் போலீஸில் காலியாக இருக்கும் உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு எஸ்எஸ்சி மூலம் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றன. அந்தவகையில், டிகிரி படித்தவர்கள் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces) மற்றும் டெல்லி போலீஸில் (Delhi Police) சப் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றும் வகையில் 4300 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.08.2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணி; சப் இன்ஸ்பெக்டர்


மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை ; 4300


* மத்திய ரிசர்வ் போலீஸ் (CAPF) – 3960


* டெல்லி போலீஸ் – 340 (ஆண்கள் – 228, பெண்கள் – 112)


கல்வி; இந்த பதவிகளுக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


மேலும் படிக்க | பிரசார் பார்தியில் டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!


வயது: 01.01.2022 அன்று 20 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.


தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination), ஆங்கில மொழி அறிவு தேர்வு (English language & Comprehension) மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


கணினி வழி தேர்வு 200 மதிப்பெண்களுக்கு 2 மணி நேர கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலம் , பொது அறிவு, திறனறிதல் , கணிதம் ஆகிய பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ஆங்கில மொழி அறிவுத்தேர்வானது, 200 மதிப்பெண்களுக்கு 2 மணி நேர கால அளவில் நடைபெறும். இதில் 200 வினாக்கள் இடம்பெறும்.


விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.08.2022


மேலும் விவரங்களுக்கு; https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_SICPO_10082022.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


மேலும் படிக்க | Post Office Scheme: தினசரி ரூ.50 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் வரை பெறலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ