Class10: தனித் தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சிப் பதிவு அறிவிப்பு
தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது குறித்து அறிவிப்பு வெளியிட்டது
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார்.
2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்யலாம்.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அனைத்து தனித் தேர்வர்களும் 18.11.2021 (வியாழக்கிழமை) முதல் 03.12..2021 (வெள்ளிக்கிழமை) -க்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
READ ALSO | ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை? உறவினர்கள் குற்றச்சாட்டு
மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்புகளுக்கு 80% வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் 2022 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.
செய்முறைப் பயிற்சி பெற்ற தேர்வர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு செய்முறைத் தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரம் அறிந்து செய்முறைத் தேர்வினை தவறாமல் எழுதிட வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர், அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளுமாறு தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்பப் படிவத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 18.11.2021 முதல் 03.12.2021 வரை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இரண்டு நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களிடம் தனித்தேர்வர்கள் 03.12.2021 க்குள் நேரில் ஒப்படைத்தல் வேண்டும். என அச்செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | ட்விட்டரில் மாணவருக்கு பதிலளித்த கலெக்டர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR