தொற்றுநோய் பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், படங்கள் அனைத்தும் ஆன்லைனில் கற்பிக்கப்படுகின்றன. இருப்பினும்,  அனைவருக்கும் சிறந்த இணைய தள இணைப்புகளோ அல்லது  ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர் வசதி உள்ளது என கூற முடியாது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், எப்படியாவது படிக்க வேண்டும் என நினைக்கும் மாணவர்கள்,  தடைகற்களையும் படிக்கற்களாக மாற்றி விடுவார்கள். 


திருச்சியில் பச்சமலை மலையில் உள்ள மனலோடை கிராமத்தில் உள்ள மாணவர்கள், படிப்பின் மீதுள்ள ஆர்வம் காரணமாக, அவர்கள் இணைய இணைப்பு பெற தினமும், மிகவும் ஆபத்தான மலைப்பகுதியி 1 கி.மீ.  நடந்து சென்று, மலையின் உச்சியில் உள்ள ஒரு குறிப்பிட்ட குகை போன்ற இடத்தை அடைகிறார்கள். ஏனென்றால் அங்கு தான் அவர்களுக்கு இணைய இணைப்பு கிடைக்கிறது.


தோனூர், சின்னா இளப்பூர், தலூர் மற்றும் மேலூர் ஆகிய பகுதியில் உள்ள மாணவர்களும் தங்கள் வகுப்புகளை தவற விடக்கூடாது என்பதற்காக இந்த மலையேற்றத்தை மேற்கொள்கின்றனர்.


மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமத்தை விளக்கி, மனச்சனல்லூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 12 ஆம் வகுப்பு உயிரியல் பிரிவில் படிக்கும் மாணவி எஸ்.தீபிகா கூறுகையில், “ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து எங்கள் ஆசிரியர்கள் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கத் தொடங்கினர். அவர்கள் பதிவுசெய்த வீடியோக்களை ஒரு வாட்ஸ்அப் மாணவர்களுக்கு அனுப்புகிறார்கள். அவர்களின் வகுப்பைக் கேட்க அந்த வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆனால் எங்கள் கிராமத்தில் இணையம் இல்லை. இந்த இடத்தில் மட்டுமே நாங்கள் தகவல்களை பெறவும்  வீடியோக்களைப் பதிவிறக்கவும் முடியும். ”


 இணையம் இணைப்பு மிகவும் மெதுவாக இருப்பதால், தங்களுக்கு பாடங்களை பதிவிறக்கம் செய்வதில் பிரச்சனைகள்  இருப்பதாக பல மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, மலையில் ஒரே ஒரு பி.எஸ்.என்.எல் டவர் மட்டுமே உள்ளது, இதன் மூலம் கிராமங்களுக்கு தொலைபேசி அழைப்புகள்  மேற்கொள்வதற்கான மொபைல் சிக்னல்கள் கிடைக்கின்றன.


இதேபோன்ற ஒரு சம்பவத்தில், நந்தூர்பார் மாவட்டத்தின் தட்கான் கிராமத்தில் உள்ள ஒரு ஆசிரியர், சிறந்த நெட்வொர்க் இணைப்பைப் பெறுவதற்காக ஒரு மரத்தின் மேல் அமர்ந்து, குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் நிலை உள்ளது.


மேலும் படிக்க | மனம் இருந்தால் மார்க்கம் உண்டு: படிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் இணயத்தில் வைரலாகும் ஹரீஷ்!!