ஜகர்நாத் மஹ்தோ அவர்கள் ஜார்கண்ட் மாநில மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றபோது, 10வது வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த காரணத்தினால் பல விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது என்று கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்வி கற்க வயது இல்லை. அதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது என்பதை  நிரூபிக்கும் விதமாக ஜார்கண்ட் மாநில மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ, திங்களன்று  பொகாரோ மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில்  11 ஆம் வகுப்பில் சேர்ந்தார். 


ALSO READ | குழந்தைகளின் நலன் தான் முக்கியம்!! தற்போதைக்கு பள்ளி, கல்லூரி திறக்க வாய்ப்பில்லை


2006 ஆம் ஆண்டு இந்த பள்ளியை அவர் ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் 25 ஆண்டுகளுக்கு பிறகு கல்வி வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.
 
53 வயதான அமைச்சர் பொகாரோ மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் கலை பிரிவை தேர்ந்தெடுத்துள்ளார் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


தொடர்ச்சியான விமர்சனங்கள் காரணமாக, அவர் தனது தனது கல்வி வாழ்க்கையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொண்டார். 10 வது தேர்ச்சி பெற்ற அமைச்சர் என்ற விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில், அவர் தான் சாதித்து காட்ட வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளார். 


"நான் எனது கல்வியை முடிப்பேன், விவசாய வேலைகளைச் செய்து கொண்டே வகுப்புகளில் கலந்துகொண்டு மக்களுக்கு சேவை செய்வேன். கல்விக்கும் கற்றலுக்கும் வயது ஒரு தடை இல்லை. எல்லாவற்றையும் செய்ய மக்களை ஊக்குவிப்பேன்" என்று மஹ்தோ செய்தியாளர்களிடம் கூறினார்.


ALSO READ | தண்ணீரில் மூழ்கியவர்களை துகில் தந்து உயிர் காத்த வீர தமிழ் பெண்கள்..!!!


1995 ஆம் ஆண்டில் அமைச்சர் தனது 10 வது வகுப்பில் தேர்ச்சி பெற்றார்,  வகுப்பில் சேர்ந்த போது அவர் ஜார்க்கண்டில் 4416 பள்ளிகளை திறப்பதாக அறிவித்தார்.


ஜகர்நாத், தனது அமைச்சரவை பொறுப்புகளையும், படிப்பையும் எவ்வாறு இணைந்து கொண்டு செல்லப் போகிறார் என்பதை பார்ப்பது உண்மையில் சுவாரஸ்யமான விஷயம் தான்