திருச்சி: இளங்கலை (Under Graduate ) மற்றும் முதுகலை (Post Graduate) மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் திருவாரூர் தமிழக மத்திய பல்கலைக்கழகம் (CUTN)  நடத்தவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறுதி ஆண்டு மாணவர்கள் (UG and PG Students) தங்கள் பட்டங்களைப் பெற வேண்டும் என்றும், தொழில் அல்லது உயர் கல்வியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என மத்திய பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


முன்னதாக, ஆகஸ்ட் 1 தேதியிட்ட ஒரு அறிவிப்பில், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அந்தந்த துறைகளால் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், சில நாட்களில் தேர்வு நடத்தப்படும் முறைகள் குறித்து தெரிவிக்கப்படும் எனக் கூறியிருந்தனர்.


ALSO READ |  இறுதி கல்வி ஆண்டு தவிர அனைத்து UG and PG செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசு


ஆன்லைன் (Online Exam) தேர்வுகள் எழுதுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் இயல்பு நிலைக்கு வந்தவுடன் பல்கலைக்கழக வளாகத்தில் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று பல்கலைக்கழகம்  கட்டுப்பாட்டாளர் ஏ ரகுபதி தெரிவித்தார்.


கோவிட் -19 காரணமாக ஏப்ரல்-மே மாதங்களில் திட்டமிடப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை (Semester Examination) பல்கலைக்கழகம் ஒத்தி வைத்திருந்தது. பிறகு ஜூன் 9 ஆம் தேதி, ஆன்லைனில் தேர்வுகளை நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனினும், அதுவும் ஒத்திவைக்கப்பட்டது.


ALSO READ |  ஆகஸ்ட் 3 பள்ளி மாணவர் சேர்க்கை கிடையாது.. வெளியான செய்தி தவறு: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்


கடந்த ஜூலை 23 ஆம் தேதி கொரோனா வைரஸ் (coronavirus pandemic) தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து (Semester exams) செய்து, அடுத்த கல்வியாண்டிற்கு மாணவர்கள் செல்ல அனுமதி அளித்து தமிழக முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டார். 


அதாவது 2019-20 ஆம் ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் (semester examinations for the year 2019-20) எழுதாமல், அடுத்த கல்வி ஆண்டுக்கு மாணவ-மாணவிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் இறுதி கல்வி ஆண்டு மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இறுதி செமஸ்டர் தேர்வுகள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.