TNPSC Group 1 Results 2022: குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு
TNPSC Group 1 Results 2022: டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெற்ற குரூப்-1 தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் எவ்வாறு தெரிந்துக்கொள்வது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்
துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகள் குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்தப் பதவிகளுக்கு மார்ச் மாதம் முதன்மை தேர்வுகள் நடத்தப்பட்டன. 66 காலிப் பணியிடங்களுக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். அதில் இருந்து சுமார் 3,800 பேர் முதன்மைத் தேர்வுகளுக்கு தேர்வாகியிருந்தனர். அதன் முடிவுகள் அண்மையில் வெளியிட்டப்பட்டது.
மேலும் படிக்க | குரூப் 4 ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும்?
இந்த தேர்வு முடிவுகளின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு 137 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கான நேர்முகத் தேர்வு ஜூலை 13,14,15 சென்னையில் நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் உள்ளிட்ட 66 காலிப் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த இணையதளத்துக்கு சென்று நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்கள் தங்களின் முடிவுகளையும், மதிப்பெண்களையும் தெரிந்து கொள்ளலாம். குரூப் 1 தேர்வுகளில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை முழுமையாக தெரிந்து கொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை குறித்த அறிவிப்பு வெளியாகும். அந்த அறிவிப்புக்குப் பிறகு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொறுப்பேற்பார்கள்.
மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ரிசல்ட் எப்போது? காத்திருக்கும் லட்சக்கணக்கானோர்!
இதேபோல், குரூப் 2 தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரூப் 2 தேர்வுக்கான எழுத்துத் தேர்வு மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
குரூப் 1 தேர்வு 2022 முடிவுகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்; www.tnpsc.gov.in
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ