தமிழ அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு நடைபெறுவதற்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் குரூப் 4 தேர்வு 2022 ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர்.
மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ரிசல்ட் எப்போது? காத்திருக்கும் லட்சக்கணக்கானோர்!
இதுகுறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் எந்த தகவலையும் வெளியிடவில்லை என்றாலும், இந்த வார இறுதிக்குள் குரூப் 4 தேர்வு 2022 ஹால் டிக்கெட் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குரூப் 2 தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக ஹால் டிக்கெட் வெளியிடப்பட்ட நிலையில், குரூப் 4 தேர்வுக்கும் அதேபோல் வெளியிடப்படலாம் என தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கூறுகின்றனர்.
வழக்கத்துக்கும் மாறாக இந்த ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், வினாத்தாள் எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பும் தேர்வுக்கு தயாராவோரிடம் இருக்கிறது. இதற்கு முன்பாக நடைபெற்ற குரூப் 4 தேர்வுகளில், அதிகமானோர் விண்ணபித்தபோதெல்லாம் வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததால், கட்ஆப் மதிப்பெண் மிக அதிகமாக எடுக்க வேண்டிய சூழல் இருந்தது. அதனால், நீண்ட நாட்கள் குரூப் 4 தேர்வுக்காக பயிற்சி பெறுபவர்கள் வினாத்தாள் மிக கடினமாக இருந்தால் நல்லது என்ற எண்ணத்தில் இருக்கின்றனர்.
மேலும் படிக்க | தமிழ் படித்தவர்களுக்கு TNPSC ஆணையத்தில் அதிக சம்பளத்தில் வேலை!
எந்த மாதிரி வினாத்தாள் இருந்தாலும் நன்றாக படித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். எளிமையாக இருக்கும்போது கவனக்குறைவான தவறுகள் அதிகம் நடக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தேர்வர்கள் கூறுகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியிட்ட பிறகு, tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்துக்கு சென்று ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ஜூலை 23 ஆம் தேதி நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு, அக்டோபரில் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR