தமிழக அரசுப் பணியில் சேர வேண்டும் என லட்சக்கணக்கானோர் குரூப் 2 தேர்வு எழுதியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலால் வேலை இழந்த பலரும் தங்களின் எதிர்காலமாக கருதி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராக தொடங்கினர். அந்த நேரத்தில் குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியானது. 5529 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற்றது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிர்பார்த்ததுபோலவே முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இம்முறை அதிகமானோர் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பித்திருந்தனர். தேர்வெழுத விண்ணப்பித்த 13 லட்சம் பேரில் சுமார் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர். வழக்கம்போல் தேர்வு எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். சயின்ஸ் பாடப்பிரிவு மட்டும் கஷ்டமாக இருந்ததாக கூறிய அவர்கள், தமிழ் மற்றும் கணித பாடங்கள் மிகவும் எளிமையாக இருந்ததாக கூறினர். அன்று மாலையே பிரபல டிஎன்பிஎஸ்சி பயிற்சி நிறுவனங்கள் தோராயமான கட்ஆப் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டனர். 


மேலும் படிக்க | டிகிரி முடித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சியில் வேலை - முழு விவரம்


இருப்பினும் அரசின் அதிகாரப்பூர்வ கட்ஆப் மற்றும் ரிசல்டையே தேர்வர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர். டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஆண்டு திட்டப்படி, குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி தேர்வு நடைபெற்றது. ஜூன் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என உத்தேசமாக கூறப்பட்டிருந்தது. ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வெழுதிய 11 லட்சம் பேர் டிஎன்பிஎஸ்சியின் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். கட்ஆப் மதிப்பெண் தெரிந்தால் மெயின்ஸ் தேர்வுக்கு தயாராக வசதியாக இருக்கும் என கருதும் அவர்கள், டிஎன்பிஎஸ்சி விரைவில் குரூப் 2 தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 



தனியார் பயிற்சி நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் குரூப் 2 தேர்வுகளுக்கான தோராயமான கட்ஆப் மதிப்பெண்களின்படி, பொதுப்பிரிவினருக்கு 150க்கும் மேலும், பிற்படுத்தப்பட்டோருக்கான கட்ஆப் 145-க்கு மேலும் இருக்கும் என யூகித்துள்ளனர். எஸ்சி - எஸ்சி பிரிவினருக்கு 140 இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். குரூப் 4 விஏஓ தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுகிறது. 7382 காலிப் பணியிடங்களுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.


மேலும் படிக்க | தமிழ் படித்தவர்களுக்கு TNPSC ஆணையத்தில் அதிக சம்பளத்தில் வேலை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR