UPSC சிவில் சர்வீசஸ் 2020 முடிவுகள் வெளியானது. சுபம் குமார் என்பவர் இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (Union Public Service Commission), சிவில் சர்வீஸ் தேர்வுகளின் இறுதி முடிவை அறிவித்துள்ளது. மொத்தம் 761 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


தேர்வு பெற்ற 761 பேரில், 263 பேர் பொது பிரிவைச் சேர்ந்தவர்கள், பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள் (EWS) 86 பேர், OBC- யிலிருந்து 229 பேர், SC- யிலிருந்து 122 பேர், மற்றும் ST -யிலிருந்து 61 பேர் என அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 150 பேர் காத்திருருப்பு பட்டியலில் உள்ளனர். இந்த காத்திருப்புப் பட்டியலில் 75 மாணவர்கள் பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள். 15 பேர் EWS, 55 பேர் OBC, 5 பேர் SC மற்றும் ஒருவர் ST பிரிவை சேர்ந்தவர்கள்.


அகில இந்திய அளவில் சுபம் குமார் என்பவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.



ஜகரதி அவஸ்தி என்ற பெண் இரண்டாவது இடத்தையும், அங்கிதா ஜெயின் பெற்றுள்ளார். 


அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களின் பட்டியல்: 


ரேங்க் 1: சுபம் குமார்


ரேங்க் 2: ஜாக்ரதி அவஸ்தி


ரேங்க் 3: அங்கிதா ஜெயின்


ரேங்க் 4: யாஷ் ஜாலுகா


ரேங்க் 5: மமிதா யாதவ்


ரேங்க் 6: மீரா கே


ரேங்க் 7: பிரவீன் குமார்


ரேங்க் 8: ஜீவானி கார்த்திக் நக்ஜிபாய்


ரேங்க் 9: அபலா மிஸ்ரா


ரேங்க் 10: சத்யம் காந்தி



தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஐஏஎஸ் பதவிக்கு 180 பேர், ஐஎஃப்எஸ்-க்கு 36 பேர், ஐபிஎஸ் அதிகாரிகள் பதவிக்கு 200 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். எஞ்சியவர்கள், மத்திய சேவைகள் குழு A மற்றும் குழு B சேவைகளில் பணியமர்த்தப்படுவார்கள். தேர்வு முடிவுகள் குறித்து யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "பல்வேறு சேவைகளுக்கான நியமனமானது, தேர்வுக்கான விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு கிடைக்கக்கூடிய காலியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளது.


ஆகஸ்ட்-செப்டம்பர், 2021 இல் நடைபெற்ற எழுத்துத் தேர்வு மற்றும் ஆளுமைத் தேர்வின் அடிப்படையில் மொத்தம் 761 விண்ணப்பதாரர்கள் நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 


Also Read | டிஜிட்டல் ஹெல்த் ஐடி கார்டு: ஒரே கிளிக்கில் மருத்துவ வரலாறு!


தேர்வு முடிவுகளை upsc.gov.in என இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.  


மத்திய அரசின் ஐ.ஏ.எஸ் பணிகான ஆட்சேர்ப்புத் தேர்வு ஆண்டுதோறும் மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. ஆரம்பநிலை, மெயின் மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளில் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு நடைபெறுகிறது.


அகில இந்திய சேவைகள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் மற்றும் ஐஆர்டிஎஸ் உள்ளிட்ட மத்திய குடிமைப் பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.


முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் மதிப்பெண்கள் இணையதளத்தில் கிடைக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Also Read | மருத்துவ ஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR