புதுடில்லி: 2020 அக்டோபரில் UPSC சிவில் சர்வீஸ் தேர்வை கடைசி முறையாக எழுத முடியாமல் போனவர்களுக்கு மற்றொரு வாய்ப்பை அளிக்க ஒப்புக்கொள்வதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

UPSC எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும், இந்திய ஆட்சிப் பணியான, ஐ.ஏ.எஸ்., இந்திய வெளியுறவு பணியான, ஐ.எப்.எஸ்., இந்திய போலீஸ் பணியான, ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது.


சிவில் சர்வீசஸ் தேர்வு -2021 க்கு (CSE-2021) மட்டுமே பொருந்தும் ஒரு கூடுதல் வாய்ப்பை, 2020 ஆம் ஆண்டு தேர்வில் தங்கள் கடைசி தேர்வை எழுத முனைந்தவர்களுக்கு மட்டும் அளிக்க இந்த தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான பெஞ்சிற்கு முன் மத்திய அரசு கூறியது.


உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குறிப்பில், சிஎஸ்இ -2021 க்கு அனுமதிக்கப்பட்ட தேர்வு எண்ணிக்கை மிச்சமிருப்பவர்களுக்கும், இதற்கான வயது வரம்பைக் கடந்து விட்டவர்களுக்கும், பிற காரணங்களுக்காக தேர்வை எழுதாமல் விட்டவர்களுக்கும் எந்த தளர்வு அளிக்கப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.


ALSO READ: UPSC: சிவில் சர்வீசஸ் 2020 தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமா?


தேர்வு எழுதுவோருக்கு, குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களின் கீழ் அளிக்கப்பட்டுள்ள தளர்வு ஒரு முறை வழங்கப்படும் தளர்வாக மட்டுமே இருக்கும். இது இந்த ஆண்டின் சிவில் சர்வீஸ் தேர்வுகள், அதாவது CSE-2021-க்கு மட்டுமே பொருந்தும் என்றும் இது ஒரு முன்னுதாரணமாக கருதப்படாது என்றும் மத்திய அரசு நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அடங்கிய உச்ச நீதிமன்ற (Supreme Court) பெஞ்சில் கூறியது.


இந்த தளர்வு எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் வேறு எந்த பிரிவு / வர்க்கத்தை சேர்ந்த நபருக்கும் ஆதரவாவோ, சமத்துவத்தின் அடிப்படையிலோ அல்லது வேறு எந்தவொரு உரிமையின் அடிப்படையிலோ எந்தவொரு தளர்வுக்கான உரிமையையும் உருவாக்காது என்று மத்திய அரசு கூறியது.


பெஞ்ச் இந்த குறிப்பை சம்பந்தப்பட்ட நபர்களுடன் பகிருமாறு கேட்டுக் கொண்டதுடன், மனுதாரர்கள் தங்கள் பதில்களை தாக்கல் செய்யுமாறும் கேட்டுக்கொண்டது.


இந்த விவகாரத்தை பிப்ரவரி 8 ஆம் தேதி விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் கூறியது.


கடந்த ஆண்டு முதல் கட்ட தேர்வு, மே, 31ல் நடக்க இருந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டு, அக்டோபர் 4 ஆம் தெதி நடந்தது. தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டில் யுபிஎஸ்சி தேர்வில் தங்கள் கடைசி முயற்சிக்கு ஆஜராகவோ அல்லது தயார்படுத்தவோ முடியாத சிவில் சர்வீசஸ் ஆர்வலர்களுக்கு கூடுதல் வாய்ப்பை வழங்க முடியாது என்று பிப்ரவரி 1 ம் தேதி மத்திய அரசு (Central Government) நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.


எனினும் தற்போது தனது இந்த முடிவை மத்திய அரசு மாற்றிக்கொண்டுள்ளது. இது கொரோனா தொற்றால் உருவான சூழலால் தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பை அளிக்கும்.


ALSO READ: பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்: தமிழக ஆளுநர்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR