JEE, NEET 2020: மருத்துவ, பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டால் என்ன ஆகும்..!!!
கோவிட் -19 தொற்று நோயை கருத்தில் கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களைத் தவிர, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகின்றனர்.
JEE, NEET 2020: அகில இந்திய பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வான ஜேஇஇ(JEE) மற்றும் மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வு நீட் (NEET) தேர்வுகள் திட்டமிடபடி செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் என நடத்தப்படும் என்று கல்வி அமைச்சகம் தெளிவுபடுத்தியிருந்தாலும், மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவிட் -19 தொற்று நோயை கருத்தில் கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களைத் தவிர, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகின்றனர்.
எனவே, அதிகரித்து வரும் கோரிக்கையை கருத்தில் கொண்டு, மூன்றாவது முறையாக தேர்வுகளை ஒத்திவைக்க அரசு முடிவு செய்தால் என்ன நடக்கும்? 2020 ஆம் ஆண்டில் NEET மற்றும் JEE தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைத்தால் மாணவர்களின் சேர்க்கை தாமதமாகும். தவிர, கல்வி ஆண்டு பாதிக்கப்படுவதோடு, அடுத்த ஆண்டு விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்பதால் குழப்பம் உருவாகும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, கிட்டத்தட்ட 150 கல்வியாளர்கள் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தனர், நுழைவுத் தேர்வுகளை இனி தாமதப்படுத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என அவர்கள் கூறியுள்ளனர். நீட், ஜே.இ.இ தேர்வுகளை எதிர்க்கும் சிலர் தங்கள் சொந்த அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகின்றனர்" என்று அவர்ள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
நுழைவுத் தேர்வுகள் சரியான நேரத்தில் நடத்தப்படாவிட்டால், மாணவர்களுக்கு ஒரு வருட காலம் இழக்கப்படும் எனக் கூறி அரசின் முடிவை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் ஆதரித்துள்ளார். “நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் சரியான நேரத்தில் நடத்தப்பட வேண்டும், இதனால் எங்கள் மாணவர்களில் கல்வி ஆண்டு வீணாகாது. ”என்று சிவ்ராஜ் சிங் சவுஹான் கூறியதாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ. தெரிவித்தது.
மேலும் படிக்க | பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வு கட்டாயம்: உச்ச நீதிமன்றம்
மறுபுறம், பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இந்த ஆண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட வேண்டும் எனக்கூறி 13 காரணங்களை பட்டியலிட்டார்.
“எப்போது நிலை இயல்பு நிலைக்கு வரும்” என்று தெரியாது என்று கூறி இந்த முடிவை நியாயப்படுத்துவது சரியில்லை. தற்போதைய சூழ்நிலையில் பரீட்சை நடத்த வேண்டும் என்ற காரணத்திற்காக ஒருவர் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முடியாது ”, என்று அவர் கூறினார், இந்த தேர்வுகளை எழுத மாணவர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராக இருப்பதாக நாமே ஒரு முடிவுக்கு வரக் கூடாது எனவும் கூறினார்
இதற்கிடையில், இந்த ஆண்டு நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை நடத்த, உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அந்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆறு அமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர்.
மேலும் படிக்க | Paytm க்கு 50 அதிகாரிகள் தேவை, 1000 பேருக்கு வேலை நிச்சயம்