அறிமுக தேர்தலில் வெற்றி வாகை சூடிய நாயகன் ஆதித்யா தாக்கரே...
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி இளைஞர் அணி தலைவரும் உத்தவ் தாக்கரேவின் மூத்த மகனுமான ஆதித்யா தாக்கரே வோர்லி தொகுதியில் வெற்றி பெற்றுதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி இளைஞர் அணி தலைவரும் உத்தவ் தாக்கரேவின் மூத்த மகனுமான ஆதித்யா தாக்கரே வோர்லி தொகுதியில் வெற்றி பெற்றுதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுரேஷ் மானேவை 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆதித்யா தாக்கரே வீழ்த்தியுள்ளார்.
சிவசேனா கட்சியை நிறுவிய பால் தாக்கரே குடும்பத்தில் இருந்து தேர்தலில் போட்டியிட்ட முதல் நபர் ஆதித்யா தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. 288 இடங்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் வோர்லி சட்டமன்ற தொகுதியில் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே சிவசேனா சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுரேஷ் மானோ போட்டியிட்டார்.
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இதில் பாஜக- சிவசேனா கூட்டணி அதிக இடங்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
இதனிடையே உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே, சுரேஷ் மானேவை விட 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இதன்மூலம் தாக்கரே குடும்பத்தில் இருந்து போட்டியிட்டு தேர்வான முதல் MLA என்ற பெருமையினை ஆதித்யா தாக்கரே பெற்றுள்ளார்.
நடந்து முடிந்துள்ள தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ள நிலையில், ஆதித்யா தாக்கரே முதலமைச்சராகவோ அல்லது துணை முதல்வராகவோ பிரதிநிதிதுவப்படுத்த சிவசேனா முயற்சிக்கும் என கூறப்படுகிறது.