குடும்ப அரசியலில் இருந்து வராத ஒருவர் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி, பிரமாண்ட வெற்றி பெற்றதை அடுத்து, அந்த கூட்டணியின் எம்.பி.,க்கள் குழு தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம், டெல்லியில் உள்ள மக்களவை மைய மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. அதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.,க்கள் குழு தலைவராக நரேந்திர மோடியை அறிவித்தார், அமித் ஷா. அதை, கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிற கட்சித் தலைவர்கள் மோதினர். பின்னர், அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


இதையடுத்து, பாஜக கட்சி தலைவர் அமித் ஷா பேசத்துவங்கினார். அப்போது அவர் கூறுகையில்; நாட்டில் முதல் முறையாக, குடும்ப அரசியல் பின்னணி இல்லாத ஒருவர், இரண்டாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது மக்கள் அளித்த தீர்ப்பு, ஏழைகளின் தேர்வு, நாட்டில் வசிக்கும் ஏழைகளுள் ஏழைகளின் தேர்வு. பல்வேறு வர்க்கத்தினரும், கடந்த ஐந்து ஆண்டுகளில் பலன் அடைந்துள்ளனர். 


ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், தொழில் முனைவோர், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என பலரும் பல வகைகளில் பலன் அடைந்துள்ளனர். சிலருக்கு கழிவறைகள் கிடைத்தன, சிலருக்கு கல்விக்கான வாய்ப்பு கிடைத்தது, சிலருக்கு தொழில் துவங்க கடன் கிடைத்தது, சிலருக்கு சிறப்பு பயிற்சி கிடைத்தது. 


ஏழைகள் பலரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அவர்களின் ஒட்டுமாெத்த தேர்வாகவே, பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் காலங்களிலும் அவரது மக்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என அவர் கூறினார்.