J&K-வில் ராகுல் காந்தி அரசியலை பார்க்கிறார்; ஆனால், பாஜக 3 தலைமுறைகள் தேசபக்தியைக் கண்டதாக அமித் ஷா பெருமிதம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு-காஷ்மீரில் அரசியல் குறித்து முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் அவதூறாக பேசியதோடு, பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 370 வது பிரிவை ரத்து செய்ததற்காக பாராட்டினார்.


மும்பையில் ஞாயிற்றுக்கிழமை 370 வது பிரிவை ரத்து செய்வது குறித்த கருத்தரங்கில் பேசிய அமித் ஷா; பிரதமர் மோடியின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன். மத்தியில் பா.ஜ., இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பின்னர், காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்குவது என்ற முடிவை அவர் தான் எடுத்தார்.சிறப்பு சட்டம் 370வது பிரிவு அரசியல் பிரச்னை என ராகுல் சொல்கிறார். ராகுல் தற்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். ஆனால், சிறப்பு சட்டம் நீக்கத்திற்காக பா.ஜ.,வினர் 3 தலைமுறைகளாக உழைத்துள்ளனர். இது அரசியல் பிரச்னை அல்ல. தேசத்தை ஒன்றாக வைப்பதற்கான எங்களது இலக்கு.



1947 ஆம் ஆண்டு காஷ்மீரில், பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக, இந்திய ராணுவம் வலிமையுடன் போரிட்டு கொண்டிருந்த போது, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை அறிவிக்காமல் இருந்திருந்தால், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்னை வந்திருக்காது. சிறப்பு சட்டம் ரத்துக்கு பிறகு, காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. மோடி, பதவி ஏற்றபிறகு, சாத்தியம் இல்லாததை சாத்தியம் ஆக்கியுள்ளோம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.