மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்றார் BJP தலைவர் அமித் ஷா!
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்!!
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்!!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றதை அடுத்து, நேற்று முன்தினம் நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்றார். தொடர்ந்து, அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று மக்களவையில் இடம்பெறும் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி, மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதேபோன்று, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் இன்று பொறுப்பேற்கிறார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக அவர் இன்று பொறுப்பேற்பதையடுத்து, அதற்கு முன்பாக டெல்லியில் போர் வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.