பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மை பெற்று பாஜக அரசு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி தலைமையில் 57 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். மத்திய அமைச்சரவை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அமைச்சர்களுக்கான இலாகாக்கள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ராஜ்நாத் சிங், இன்று நண்பகல் 12 மணியளவில் பொறுப்பேற்றுக்கொண்டார். 


பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் யெசோ நாயக் (Yesso Naik) உள்ளிட்டோர் ராஜ்நாத் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக ராஜ்நாத்சிங் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.


இந்நிலையில், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் ராணுவ தளபதி பிபின் ராவத், கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங், விமானப்படை தளபதி மார்ஷல் பி.எஸ்.தனோவா ஆகியோர் மரியாதை செலுத்தினர். பின்னர் போர் நினைவக அருங்காட்சியகத்தையும் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். அதேபோன்று மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா  முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். உள்துறை இணை அமைச்சர்கள் கிஷன்ரெட்டி, நித்யானந்த் ராய் உள்ளிட்டோர் அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.