மாநிலம் முழுவதும் இலவச Wi-Fi வசதி திட்டம்; ஒவ்வொரு பயனருக்கும் மாதத்திற்கு 15 GB இலவச தரவு வழங்க மாநில அரசு முடிவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் தனது கட்சியின் முக்கிய வாக்குறுதியான இலவச Wi-Fi இணைய சேவையை தேசிய தலைநகரில் 'விரைவில்' வழங்கத் தொடங்கும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 


தேசிய தலைநகரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில்; டெல்லி முழுவதும் இலவச Wi-Fi வழங்கும் பணி ஒரு வகையில் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதன் மூலம் ஒவ்வொரு பயனருக்கும் ஒவ்வொரு மாதமும் 15 GB வரை தரவு இலவசமாக வழங்கப்படும் என்று கூறினார்.


டெல்லி முழுவதும் 'இதன் முதல் கட்டமாக11, 000 ஹாட்ஸ்பாட்கள் பொருத்தப்படும். இலவச Wi-Fi வழங்கும் பணி ஒரு வகையில் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயனருக்கும் ஒவ்வொரு மாதமும் 15 GB தரவு இலவசமாக வழங்கப்படும் '' என்று டெல்லி முதல்வர் கூறினார்.


தேசிய தலைநகரில் கட்சி ஆட்சிக்கு வந்தால், தங்கள் கட்சி டெல்லி முழுவதும் இலவச Wi-Fi இணைய சேவையை வழங்கும் என்று கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி டெல்லிவாசிகளுக்கு முன்பு வாக்குறுதியளித்திருந்தது. இந்த வாக்குறுதி, பிப்ரவரி 2015 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இளைஞர்களிடையே கட்சி ஆதரவைப் பெற உதவியது. 



சமீபத்தில் முடிவடைந்த மக்களவை 2019 தேர்தலில் நான்கு நாடாளுமன்ற இடங்களில் கெஜ்ரிவாலின் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்தது நினைவிருக்கலாம். சட்டசபை தேர்தல்கள் ஒன்பது மாதங்கள் மட்டுமே உள்ளதால், இலவச Wi-Fi தொடர்பான அவரது அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.


2015 சட்டமன்றத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி அறிக்கையில், கெஜ்ரிவால் “டெல்லி முழுவதும் பொது இடங்களில் Wi-Fi இலவசமாகக் கிடைக்கச் செய்வதாக உறுதியளித்தார். சிட்டிவெயிட் Wi-Fi டிஜிட்டல் பிளவுகளைத் தடுக்க உதவும். இது கல்வி, தொழில்முனைவோர், வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும், மேலும் பெண்களின் பாதுகாப்பு முயற்சிகளுடன் இணைந்திருக்கும் ”என்று ஆம் ஆத்மி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.