Mizoram Assembly Election Results 2023: மிசோரம் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 4-ஆம் தேதி அதாவது திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக, ஐந்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருந்தது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேர்தல் கமிஷன் அறிக்கை


'டிசம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை. மிசோரமில் ஞாயிற்றுக்கிழமைக்கு தனிச்சிறப்பு உள்ளது. தேர்வு முடிவுகளை அறிவிக்கும் தேதியை மாற்றுமாறு பலர் எங்களிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த காரணத்திற்காக நாங்கள் தேதியை மாற்றினோம்.' என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மிசோரமின் 40 தொகுதிகளுக்கு நவம்பர் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


மிசோரமில் கிறித்தவ மக்கள் தொகை அதிகம். டிசம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ சமூகத்தின் பிரார்த்தனையும் பண்டிகையும் உள்ளது. இந்த மாநிலத்தில் 87 சதவீத கிறிஸ்தவர்கள் உள்ளனர். எனவே, அவர்களின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் தீவிரமாக எடுத்துக் கொண்டு வாக்கு எண்ணும் தேதியை மாற்றியுள்ளது.


மிசோராம் தேர்தல் களம்


மிசோரமில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 7 அன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறும். ஒருபுறம், மிசோ தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைக்க விரும்புகிறது. மறுபுறம், காங்கிரஸும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு தன்னால் முடிந்தவரை முயற்சிக்கிறது. 


40 உறுப்பினர்களைக் கொண்ட மிசோரம் சட்டசபைக்கு நவம்பர் 7 ஆம் தேதி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. இம்முறை, தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தின்படி, மிசோரமில் 81.25 சதவீத பெண் வாக்காளர்களும், ஆண் வாக்காளர்கள் 80.04 சதவீதமும் வாக்கை பதிவு செய்துள்ளனர். மொத்தத்தில், மாநிலத்தில் மொத்தமுள்ள 8.52 லட்சம் வாக்காளர்களில் 80.66 சதவீதம் பேர் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி 174 வேட்பாளர்களின் தேர்தல் விதியை முடிவு செய்தனர். 


மிசோரம் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களிலும், செர்ச்சிப் மாவட்டத்தில் அதிகபட்சமாக 84.78 சதவீத வாக்குகளும், மமித் மாவட்டத்தில் 84.65 சதவீதமும், ஹ்னாதியால் மாவட்டத்தில் 84.19 சதவீதமும், லுங்கிலி மாவட்டத்தில் 83.68 சதவீதமும் வாக்கு பதிவாகின. 


ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF), முக்கிய எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM), காங்கிரஸ் ஆகியவை தலா 40 இடங்களில் போட்டியிட்டன. பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி (Aam Aadmi Party) முறையே 23 மற்றும் 4 இடங்களில் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதிக்க களம் கண்டன. 


கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 26 இடங்களையும், ஜோரம் மக்கள் இயக்கம் 8 இடங்களையும், காங்கிரஸ் 5 இடங்களையும், BJP 1 இடங்களையும் வென்றன. 40 உறுப்பினர்களைக் கொண்ட மிசோரம் சட்டமன்றத்திற்கான முடிவுகள் டிசம்பர் 4 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.


மேலும் படிக்க | தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், முதல்வர் பதவி யாருக்கு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ