ராஜஸ்தானில் BSP-க்கு பின்னடைவு; 6 MLA-க்கள் காங்., இணைவு..
ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெரும் பின்னடைவு; ஆறு எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு!!
ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெரும் பின்னடைவு; ஆறு எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு!!
ராஜஸ்தானில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சிக்கு (BSP) பெரும் பின்னடைவாகக் கருதப்படும் நிலையில், கட்சியின் ஆறு எம்.எல்.ஏக்களும் பாலைவன மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளனர். ஆறு BSP எம்.எல்.ஏ-க்களும் நேற்று ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர் சி.பி.ஜோஷி சந்தித்து காங்கிரஸ் கட்சியில் சேர்வது குறித்த விருப்ப கடிதத்தை வழங்கியுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட்டுடன் தொடர்பு கொண்டு அவரது விருப்பப்படி கட்சியில் சேர்ந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் முன்னதாக ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வந்தனர்.
இந்நிலையில், காங்கிரசில் சேருவதற்கான அவர்களின் முடிவிற்குப் பிறகு, ராஜஸ்தானில் அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் 12 சுயோட்சை எம்.எல்.ஏக்கள் காங்கிரசில் சேர்ந்தனர், ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் காங்கிரசில் இணைந்ததன் மூலம் இம்மாநிலத்தில் கட்சியின் எண்ணிக்கை மேலும் வலுப்பெற்றது.
ராஜஸ்தானில் காங்கிரசில் இணைந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள்: ராஜேந்திர குடா (உதய்பூர்வதியைச் சேர்ந்த MLA), ஜோகேந்திர சிங் அவானா (நாட்பாயைச் சேர்ந்த MLA), லகன் சிங் மீனா (கரவ்லியைச் சேர்ந்த MLA), வாஜிப் அலி (நகரைச் சேர்ந்த MLA), சந்தீப் யாதவ் (டிஜாரா MLA) மற்றும் தீப்சந்த் (கிஷன்கர்பாஸைச் சேர்ந்த MLA) ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.