2017-18 ஆம் ஆண்டில் பாஜகவின் சொத்துக்கள் 22.27% ஆக அதிகரிப்பு; காங்கிரஸின் மதிப்பு 15.26% ஆகவும் குறைந்துள்ளதாக ஏடிஆர் அறிக்கை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாரதீய ஜனதா கட்சியின் ஒட்டுமொத்த சொத்துக்கள் ஒரு வருடத்திற்குள் 22.27 சதவீதம் அதிகரித்துள்ளன. இது கடந்த 2016-17 ஆம் நிதியாண்டில் ரூ .1213.13 கோடியிலிருந்து 2017-18 நிதியாண்டில் 1483.35 கோடியாக அதிகரித்துள்ளது என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் கண்காணிப்புக் கழகம் (ADR) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. 


இருப்பினும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட சொத்துக்களை குறைவாக பதிவு செய்தன. காங்கிரஸின் மொத்த சொத்துக்கள் 15.26 சதவீதம் குறைந்து, 2016-17 முதல் 2017-18 வரை ரூ .854.75 கோடியிலிருந்து ரூ .7244.35 கோடியாக குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் NCP-யின் சொத்துக்கள் 16.39 சதவீதம் குறைந்து ரூ .11.41 கோடியிலிருந்து ரூ .59.54 கோடியாக குறைந்துள்ளது.


BJP, காங்கிரஸ், NCP, பகுஜன் சமாஜ் கட்சி (SP), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆகிய ஏழு தேசிய கட்சிகளால் அறிவிக்கப்பட்ட மொத்த சொத்துக்களை ADR ஆய்வு செய்தது.


இந்த ஏழு கட்சிகள் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த சொத்துக்கள் 2016-17 நிதியாண்டில் ரூ .3456.65 கோடியிலிருந்து ஆறு சதவீதம் அதிகரித்து 2017-18 நிதியாண்டில் ரூ .3260.81 கோடியாக அதிகரித்துள்ளது. திரிணாமுலின் மொத்த சொத்துக்கள் 10.86 சதவீதம் அதிகரித்து ரூ .26.25 கோடியிலிருந்து 29.10 கோடியாக அதிகரித்துள்ளது.


முன்னர் குறிப்பிட்டிருந்த ஏழு அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த கடன்கள் 2017-18 நிதியாண்டில் ரூ .514.99 கோடியிலிருந்து ரூ .374.61 கோடியாக 27.26 சதவீதம் குறைந்துள்ளது. 2017-18 நிதியாண்டில், காங்கிரஸ் அதிகபட்ச கடன்களாக ரூ .324.2 கோடியாக அறிவித்தது, அதைத் தொடர்ந்து பாஜக ரூ. 21.38 கோடியும், திரிணாமுல் ரூ .10.65 கோடியும் கடன்கள் உள்ளதாக அறிவித்திருந்தது. 


2016-17 மற்றும் 2017-18 நிதியாண்டுகளுக்கு இடையில், நான்கு கட்சியின்  அதிக பொறுப்புகளை அறிவித்தன. காங்கிரஸ் ரூ .137.53 கோடி, CPM ரூ. 3.02 கோடி, NCP ரூ .1.34 கோடி, திரிணாமுல் ரூ .55 லட்சம் குறைந்துள்ளது. ஆயினும், பாஜக, CPI மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி, 2017-18 நிதியாண்டில் கடன்களின் அதிகரிப்புகளையும் அறிவித்தன. 


அரசியல் கட்சிகள் வணிகமற்ற, தொழில்துறை அல்லாத அல்லது வணிக சாரா நிறுவனத்தின் கீழ் வருகின்றன. எனவே, மற்ற நிறுவனங்களின் நிலையான கணக்கியல் வடிவங்கள் அரசியல் கட்சிகளுக்கு பொருந்தாது என்று தேர்தல் கண்காணிப்புக் குழு ADR தெரிவித்துள்ளது.