EVM விவகாரம் குறித்து சந்திரபாபு நாயுடு, தேவகவுடா சந்திப்பு!!
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னாள் பிரதமர் தேவகவுடாவை பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை!!
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னாள் பிரதமர் தேவகவுடாவை பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை!!
தேர்தலுக்குப் பிறகு இழுபறி நீடித்தால், பாஜக அல்லாத எதிர்கட்சிகளை திரட்டி ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்தித்து தேர்தல் முடிவுக்குப் பின் அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவர் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியையும் சுமார் அரைமணிநேரம் சந்தித்து பேசினார். கர்நாடக காங்கிரஸ் ஆதரவில் ஆட்சியமைத்து வரும் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு அண்மையில் வெளியான தேர்தலுக்குப் பிந்தய கருத்துக் கணிப்பையடுத்து காங்கிரஸ் கட்சியுடன் விரிசல் ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல இருந்த குமாரசாமி திடீரென தமது பயணத்தை ரத்து செய்து விட்டார். இந்நிலையில் குமாரசாமியை சந்தித்த நாயுடு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையான செயல்பாட்டால்தான் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க முடியும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்; இரு தலைவர்களும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை (EVM) சச்சரவுகள் சுற்றி கூறப்படும் கையாளுதல் விவாதிக்கப்பட்டது. காலை நேரத்தில் தவறான EVM களின் பிரச்சினைகளை அவர் (நாயுடு) எழுப்பினார். இந்த சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக காகிதத் தொகுதிக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் பரிந்துரை செய்தார். இன்று என்னை அல்லது எச்.டி.குமாரசுவாமி தில்லிக்கு செல்ல முடியாது, எங்கள் பிரதிநிதி அங்கு இருந்தார் என தேவகவுடா தெரிவித்தார்.
செவ்வாயன்று தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டபோது, "இன்று 5 சதவிகிதம் குறைபாடுகள் இருப்பின், அவை அனைத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும்" என்று நாயுடு கூறியது குறிப்பிடத்தக்கது.