சென்னை: ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தை உலுக்கிய ஆட்சேர்ப்பு முறைகேடு தொடர்பாக முன்னாள் அதிமுக போக்குவரத்து அமைச்சரும், தற்போதைய திமுக வேட்பாளருமான வி.செந்தில் பாலாஜி மற்றும் பல்வேறு போக்குவரத்து நிறுவனங்களின் மூத்த ஓய்வு பெற்ற மற்றும் சேவையில் உள்ள அதிகாரிகள் உட்பட 46 பேர் மீது சென்னை காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. எக்மோரில் உள்ள சிசிபி மற்றும் சிபி-சிஐடி வழக்குகளுக்கான பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை நகர குற்றப்பிரிவு பணி மோசடி பிரிவு மேற்கோள் காட்டிய 47 குற்றவாளிகளில், 33 பேருக்கு 2014-15 ஆம் ஆண்டில்  சென்னை, எம்.டி.சி உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து நிறுவனங்களில் நியமனம் கிடைத்தது. இந்த நியமனத்தைப் பெற, அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு அவரது உதவியாளர்கள் மூலமாக லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ரிசர்வ் குழு ஓட்டுநர்கள், நடத்துனர்கள், ஜூனியர் டிரேட்ஸ் மென், ஜூனியர் அசிஸ்டென்ட் (ஜேஏ), ஜூனியர் இன்ஜினியர் (ஜேஇ) மற்றும் உதவி பொறியாளர் (ஏஇ) ஆகிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் ஆட்சேர்ப்பு முறைகேட்டை மறு ஆய்வு செய்யுமாறு சிசிபி-யிடம் கேட்டுக் கொண்டது. இந்த நியமனங்களில், செந்தில் பாலாஜியுடன் சேர்ந்து பல அதிகாரிகள் நியமன செயல்முறையில் முறைகேடுகள் செய்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். 2015, ஜனவரி 1 தேதிப்படி, நியமன உத்தரவுகள் தகுதி பட்டியலின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை, மாறாக, அவை பாலாஜி மோசடி செய்து தயாரித்த பட்டியலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வழக்கைப் பொறுத்தவரை செந்தில் பாலாஜி (Senthil Balaji) முதல் குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ளார். 


ALSO READ: போக்குவரத்து துறை வேலை மோசடி தொடர்பாக சென்னையில் குற்ற பிரிவு போலீஸார் சோதனை..!!!


செந்தில் பாலாஜியின் உதவியாளர்கள் பி சண்முகம் மற்றும் எம் கார்த்திகேயன் ஆகியோர் அவர் சார்பாக செயல்பட்டு வேலைக்காக விண்ணப்பித்தவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் வசூலித்தனர். இவர்களுக்கு நியமன உத்தரவுகளை வழங்க, எம்.டி.க்கள், நியமனம் செய்யும் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களின் பணியாளர்கள் பிரிவு அதிகாரிகளுடன் சேர்ந்து செந்தில் பாலாஜி சதித்திட்டம் தீட்டியதாக கூறப்பட்கிறது. அவர் அமைச்சராக இருந்ததால், எந்த தடையும் இல்லாமல் இவை அனைத்தும் சீராக நடந்தன. குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற அதிகாரிகள், எம்.டி.சி-யின் ஓய்வுபெற்ற எம்.டி. ஆல்ஃப்ரெட் தினகரன், எம்.டி.சி-யின் ஓய்வுபெற்ற ஜெ.எம்.டி. வி.வரதராஜன், எம்.டி.சி-யின் முன்னாள் மேலாளர் எஸ். அருண் ரவீந்திர டேனியல், எம்.டி.சி-யின் இடை நீக்கம் செய்யப்பட்ட எம்.டி. ஜி.கணேசன் ஆகியோர் ஆவர். 


கரூரில் 6 இடங்களில் சோதனை 


வருமான வரித் துறை அதிகாரிகள், கரூரில் ஜவுளி உற்பத்தி அலகுகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட ஆறு இடங்களில் சோதனை மெற்கொண்டனர். இந்த அலகுகளில் பெரும் பணம் பரிமாற்றம் தொடர்பான உள்ளீடுகளில் குழு செயல்பட்டதாகவும், அவற்றில் ஐந்து அலகுகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், இந்த நிறுவனங்களுக்கு அதிமுக (AIADMK) வேட்பாளர் எம்.ஆர். விஜய பாஸ்கர் அல்லது திமுக வேட்பாளர் வி செந்தில் பாலாஜி ஆகியோருடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் இன்னும் தெளிவாகக் கூறவில்லை.


ALSO READ: தமிழக சட்ட மன்ற தேர்தல்களை புறக்கணிப்போம்; ராமேஸ்வரம் மீனவர்கள் எச்சரிக்கை


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR