மேடையில் மோதல், போஸ்டரில் ஒற்றுமையா? அதிமுக, திமுக ஒரே பெண்ணின் படத்தைப் போட காரணம் என்ன?

அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்பதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது பல அசாதாரண நிகழ்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதில், அதிமுக, திமுக-வென (DMK) இருவரது டிஜிட்டல் சுவரொட்டிகளிலும் சிரித்து போஸ் கொடுக்கும் இந்த சிகப்பு நிற புடவை அணிந்த பெண்ணின் படம் சமீபத்திய சேர்க்கையாகும்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 23, 2021, 07:08 PM IST
  • பிரச்சார மேடைகளிலும், பேரணிகளிலும் விரோதம், டிஜிட்டல் சுவரொட்டிகளில் ஒற்றுமையா?
  • கவனிக்காமல் பெரிய தவறை செய்தனர் இரு கட்சிகளின் ஐ.டி பிரிவுகளும்.
  • தவறுக்குப் பிறகு இப்போது துவங்கியது சமாளிப்பு படலம்.
மேடையில் மோதல், போஸ்டரில் ஒற்றுமையா? அதிமுக, திமுக ஒரே பெண்ணின் படத்தைப் போட காரணம் என்ன?  title=

திருச்சி: தேர்தல் களத்தில், பிரச்சார மேடைகளிலும், பேரணிகளிலும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிப் பேசி விமர்சிக்கும் அதிமுக-வும் திமுக-வும் இவ்வளவு பெரிய தவறை செய்வார்கள் என யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள். சிவப்பு நிற புடவை அணிந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை இருவரும் தங்கள் டிஜிட்டல் பிரச்சாரங்களில் பயன்படுத்தியுள்ளனர். 

இதை இரு கட்சிகளும் கவனிக்காமல் வெளியிட்டு விட்டாலும், இணைய வாசிகள் இதை கண்டுகொண்டனர். பரம எதிரிகளான இரு கட்சிகளுக்கும் இது மிகப்பெரிய இக்கட்டான சூழலை ஏற்படுத்தியுள்ளது. 

முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி (Edappadi K Palaniswami) மற்றும் மு.க ஸ்டாலின் ஆகியோரின் படங்களையும் கொண்ட இந்த சுவரொட்டிகள் இப்போது இரு கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளுக்கிடையில் வார்த்தைப் போரைத் தூண்டிவிட்டுள்ளது. மார்ச் 7 ம் தேதி திருச்சியில் நடந்த ஒரு அரசியல் பேரணியில் திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியின் தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்ட பிறகு, கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு விரைவாக வாக்குறுதிகளை விளக்கும் டிஜிட்டல் சுவரொட்டிகளை உருவாக்கியது. 

“வளரும் வாய்ப்புகள் வளமான தமிழ்நாடு” என்ற சொற்றொடரைத் தாங்கிய ஒரு டிஜிட்டல் சுவரொட்டி திமுக உறுப்பினர்களால் பகிரப்பட்டது. இதில், புடவை அணிந்த ஒரு பெண் சிரித்துக் கொண்டு நிற்பதாக காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகள் சமூக ஊடகங்கள் மற்றும் திமுகவின் பக்கங்களில் பரவலாக பகிரப்பட்டன.

ALSO READ: TN Election 2021: வரி ஏய்ப்பு செய்தார் உதயநிதி ஸ்டாலின்; தேர்தல் ஆணையத்தில் AIADMK புகார்

இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்பு, அதிமுக-வின் தகவல் தொடர்பு பிரிவு, சில டிஜிட்டல் சுவரொட்டிகளை வெளியிட்டது. அதிலும் அதே பெண் காணப்பட்டார். அதிமுக ஐ.டி பிரிவின் அதிகாரப்பூர்வ FB பக்கத்தில் பகிரப்பட்ட இந்த சுவரொட்டிகள், அதிமுக-வின் பல்வெறு நலத்திட்டங்களை பட்டியலிட்டு, இந்த அரசையே மீண்டும் வாக்களித்து தேர்ந்தெடுக்குமாறு இல்லத்தரசிகளைக் கேட்டுக்கொண்டது. 

"அதிமுக (AIADMK) எங்கள் தேர்தல் வாக்குறுதிகளை மட்டும் காப்பி அடிக்கவில்லை. எங்கள் புதுமுயற்சிகளையும் காப்பி அடிக்கிறது. எங்கள் சுவரொட்டிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள  பெண்ணின் படத்திற்கான பதிப்புரிமை எங்களிடம் உள்ளது” என்று திமுக ஐடி பிரிவின் மாநில அளவிலான செயல்பாட்டாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அதிமுக, அந்த சுவரொட்டியில் உள்ள பெண்ணின் படத்தை தாங்கள்தான் முதலில் பயன்படுத்தியதாகவும், ஜனவரி மாதமே அரசாங்க விளம்பரங்களுக்கு இந்த படம் பயன்படுத்தப்பட்டதாகவும் தெளிவு படுத்தியுள்ளது. ”திமுக எங்களை காப்பியடித்து விட்டு, இப்போது கதையை மாற்றுகிறது” என்று சீறியது அதிமுக. 

இதற்கிடையில், முதல்வர் பழனிசாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் (MK Stalin) ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ள அவரவர் கட்சி டிஜிட்டல் சுவரொட்டிகளில் ஒரே பெண்ணின் படம் வந்தது குறித்து மக்களும் இணைய வாசிகளும் தங்கள் பங்குக்கு விமர்சித்து வருகிறார்கள். வெளி உலகில் இரு கட்சிகளும் அடித்துக்கொண்டாலும், இப்படிப்பட்ட மறைமுக ஒற்றுமைகள் இரு கட்சிகளுக்கும் இருக்கிறது என சிலர் எள்ளி நகையாடுகிறார்கள். 

மொத்தத்தில், அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்பதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது பல அசாதாரண நிகழ்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதில், அதிமுக, திமுக-வென (DMK) இருவரது டிஜிட்டல் சுவரொட்டிகளிலும் சிரித்து போஸ் கொடுக்கும் இந்த சிகப்பு நிற புடவை அணிந்த பெண்ணின் படம் சமீபத்திய சேர்க்கையாகும்.  

ALSO READ: 1000 ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுக-வை அசைக்க முடியாது: இடியாய் பொழிந்த எடப்பாடி

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News