மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் சிந்த்வாரா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் அவர் சட்டசபை உறுப்பினராக தேர்வாகவில்லை.  இதனால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் நடந்த சிந்த்வாரா சட்டசபை தொகுதியில் இவர் போட்டியிட்டார். 


இந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று நடைப்பெற்றது. இதில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் விவேக் புன்டி சாஹுவை 25, 837 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கமல்நாத் வெற்றி பெற்றுள்ளார்.


கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி இத்தேர்தலில் கமல்நாத் 112508 வாக்குகளும், பாஜக-வின் விவேக் புன்டி சாஹு 87896 வாக்குகளும் பெற்றுள்ளார்.


இதேபோன்று சிந்த்வாரா மக்களவை தொகுதியில் கமல்நாத்தின் மகன் நகுல் நாத் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார்.  இவரை எதிர்த்து பா.ஜ.க.வின் நாதன்சஹா கவரேட்டி போட்டியிட்டார்.  வாக்கு எண்ணிக்கை முடிவில், 37, 536 வாக்குகள் வித்தியாசத்தில் நகுல் நாத் வெற்றி பெற்றுள்ளார். அதாவது இத்தேர்தலில் நகுல் நாத் பெற்ற வாக்குகள் 586551, நாதன்சஹா பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 548845 ஆகும்.