பிஹார், ராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேச இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பெயரை காங்கிரஸ் அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் எற அறிவிக்கப்பட்டுத்து. இதேபோல் தமிழகத்தில் விக்கிரவண்டி, நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜர் நகர் உள்ளிட்ட நாடு முழுவதிலும் காலியாக இருக்கும் 64 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா முன்னதாக அறிவித்தார்.


பின்னர் கர்நாடாக மாநிலத்தின் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீதம் உள்ள தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.



இந்நிலையில் பிஹார், ராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேச மாநில இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பெயர்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.


இந்த பட்டியலின் படி., பிஹார் சம்சட்பூர் தொகுதியில் அசோக் குமாரும், பிஹார் கிஷான்கன்ச் தொகுதியில் சாயிதா பானுவும், ராஜஸ்தான் மாநில மண்டாவா தொகுதியில் ரீடா சௌதிரியும், கிரிஸ்த்வார் தொகுதியில் ஹரேந்திர மத்ரா மற்றும் உத்திர பிரதேச மாநிலம் பால்ஹா தொகுதியில் மானு தேவியும் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகம் பொருத்தவரையில்., விக்கிரவண்டி தொகுதியில் திமுக-வும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. புதுவை காமராஜ் நகர் தொகுதியில் இருந்து ஜான் குமார் போட்டியிடுவார் எனவும் முன்னதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.