பதர்பூரைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நாராயண் தத் சர்மா, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: பதர்பூரைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நாராயண் தத் சர்மா புதன்கிழமை பிற்பகுதியில் அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டார். ஒரு பொதுக் கூட்டத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது ஒரு வாகனத்தில் வந்த குறைந்தது 8-10 ஆண்கள் அவரைத் தாக்கியதாக சர்மா குற்றம் சாட்டினார்.


70 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், களத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின்  தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மியின் சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க-ன் வேட்பாளராக இளைஞர் அணி தலைவர் சுனில் யாதவ், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணவர் அமைப்பின் டெல்லி தலைவரான ரொமேஷ் சபர்வால் ஆகியோர் போட்டியிடுவதால், அங்கு தலைவர்களின் பிரச்சாரம் களைகட்டி வரும் நிலையில், அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியீட்டு வருகிறது. 


இந்நிலையில், பதர்பூரைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நாராயண் தத் சர்மா புதன்கிழமை பிற்பகுதியில் அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குய்ர்த்து அவர் கூறுகையில்... "கண்ணாடித் துண்டுகளால் நான் காயமடைந்தேன், நான் யாருக்கு எதிராக தேர்தலில் போராடுகிறேன் என்று நான் சந்தேகிக்கிறேன்," என்று சர்மா கூறினார்.


இதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது கட்சி வேட்பாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார். இது குறித்து அவர் தொடர்ச்சியாக பதிவிட்டுள்ள ட்வீடில்... பகுஜன் சமாஜ் கட்சி மேலாளர் வாக்கெடுப்பு குழுவை இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். டெல்லியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் சர்மாவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளர்களிடமும் அவர் வேண்டுகோள் விடுத்தார். 



இப்பகுதியில் கடும் பொலிஸ் படை நிறுத்தப்பட்டு, ஷர்மாவின் பாதுகாப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட டிக்கெட் மறுக்கப்பட்டதால் சர்மா சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.