மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் நிலையில் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார் ஃபட்னாவிஸ்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரத்தில் 288 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் பாஜக 105 தொகுதிகளிலும் சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. பெரும்பான்மைக்கும் அதிகமாக 161 இடங்களில் இந்த கூட்டணி வெற்றிபெற்றாலும், ஆட்சியமைக்க முடியாத நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், சிவசேனாவின் ஒரு குழு முட்டுக்கட்டைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், பாரதிய ஜனதாவுடன் (BJP) இணைந்து ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கும் ஆதரவாக உள்ளது, மற்றொன்று 50:50 சூத்திரத்தில் பிடிவாதமாக உள்ளது. 


அதாவது, முதலவர் பதவியை தலா 2½ ஆண்டுகள் சுழற்சி அடிப்படையிலும், மந்திரி பதவிகளை சரிசமமாகவும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை பா.ஜ.க. நிராகரித்துவிட்டதால் இந்த இழுபறி தொடர்கிறது. இந்த பரபரப்பான அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் நிலையில் மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தேவேந்திர ஃபட்னாவிஸ் கடிதத்தை வழங்கியுள்ளார். 



தேவேந்திர பட்னாவிஸ் தனது அமைச்சரவை சகாக்களுடன் மும்பை ராஜ்பவனுக்கு இன்று மாலை சென்றார். அங்கு அவர் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்தார். அப்போது ஆளுநரிடம் தனது பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை அளித்தார்.