தமிழகத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆட்சியை தக்கவைத்துக்கொண்ட அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு தேமுதிக சார்பில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 


இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "தமிழகத்தில் நடைப்பெற்று முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், வேட்பளார்களுக்குக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பாராளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அயராது பாடுபட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த கழக நிர்வாகிகளுக்கும், வாக்களித்த நமது தேமுதிக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 


மீண்டும் மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பணியில் என்றும் தேமுதிக தொடர்ந்து ஈடுபட்டு அயராது பணியாற்றும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.