டெல்லி: நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த மே 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைப்பெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.


தற்போதைய நிலவரபப்டி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 322-க்கு அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதில் பாஜக மட்டும் 277 இடங்களில் தனிப் பெரும்பான்மையுடன் முன்னிலை வகிக்கிறது.