எந்தவித டயட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்கணுமா? இதோ எளிய வழிகள்!

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பலரும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், எந்தவித டயட்டும் இல்லாமல் எப்படி உடல் எடையை குறைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - RK Spark | Last Updated : Jul 2, 2024, 01:03 PM IST
  • டயட் இல்லாமல் உடல் எடையை குறைக்க முடியுமா?
  • உணவு பழக்கங்களில் சுயக்கட்டுப்பாடு அவசியம்.
  • எடையை எளிய குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.
எந்தவித டயட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்கணுமா? இதோ எளிய வழிகள்! title=

Weight Loss Tips: தற்போதைய வாழ்க்கை முறை, உணவு பழக்கங்கள், உணவு உண்ணும் நேரம் ஆகிய ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, இரவு தாமதமாக சாப்பிடுவது, அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிடுவது போன்றவை உடல் எடையை அதிகரிக்க செய்கின்றன. இப்படி ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் உடல் எடை அதிகரிப்பதுடன் பல்வேறு உடல்நல கோளாறுகளும் ஏற்படுகிறது. உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு சில சமயங்களில் இதயம் சம்பந்தமான நோய்களையும் ஏற்படுத்துகிறது. எனவே சரியான நேரத்தில் சரியான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். மேலும் உடல் எடை அதிகரிப்பதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

மேலும் படிக்க | சுகர் அளவை தட்டி கழிக்க இந்த உலர் பழங்களை கட்டாயம் சாப்பிடுங்கள்

அதிகரிக்கும் உடல் பருமனால் தினசரி செய்யும் வேலையை கூட செய்ய முடியாமல் போகலாம். இதனால் உடல் பலவீனம் அடைந்து இதய நோய்களை உண்டாக்குகின்றன. எனவே உடல் எடையை குறைக்க பலரும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். டயட்டில் இருப்பது தொடங்கி, உடற்பயிற்சி செய்வது, வாக்கிங் செல்வது, யோகா செய்வது என பல முயற்சிகளை செய்து வருகின்றனர். உடல் எடையை குறைக்க விரும்புவோர் முதலில் செய்வது டயட்டில் இருப்பதுதான். உடல் எடையை குறைக்க சத்தான உணவுகளை எடுத்து கொள்ள தொடங்குகின்றனர். ஆனால் பலராலும் இதனை கடைபிடிக்க முடிவதில்லை. எனவே, டயட் இல்லாமல் எப்படி உடல் எடையை குறைப்பது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் பிடித்தமான உணவுகளை சாப்பிட்டும் கூட உடல் எடையை குறைக்கலாம்.

டயட் இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி?

உணவுகளின் தேர்வில் கவனம் முக்கியம்: உடல் எடையை குறைக்க நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தினசரி உணவில் எடுத்து கொள்ள வேண்டும். இந்த உணவுகளை சாப்பிடுவதால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தரும். மேலும் அதிகப்படியான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். தேவையில்லாத நேரத்தில் நாம் சாப்பிடும் ஜங்க் ஃபுட்தான் அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர காரணமாக அமைகிறது. எனவே கீரை, பீன்ஸ், ஆரஞ்சு, ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

காலை உணவு அவசியம்: பலரும் உடல் எடையை குறைப்பதற்காக காலை உணவை தவிர்க்கின்றனர். மேலும் ஒரு சிலருக்கும் வேலை காரணமாக காலை உணவை சாப்பிட முடிவதில்லை. ஆனால் காலை உணவை தவிர்ப்பது முற்றிலும் தவறு. முடிந்தவரை எதாவது ஒரு உணவை காலையில் எடுத்து கொள்ள வேண்டும். சாப்பிட முடியாத பட்சத்தில் நட்ஸ் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம். காலை உணவை தவிர்ப்பதால் மட்டும் உடல் எடை குறையாது.

அதிகமாக சாப்பிட வேண்டாம்: ஒரு சிலர் காலை உணவை தவிர்த்துவிட்டு நேரடியாக மதியம் சாப்பிடுகின்றனர். இதனால் பசி ஏற்பட்டு மதியம் அதிகமாக சாப்பிடுகின்றனர். இது உடல் எடையை சீக்கிரம் அதிகரிக்கும். எனவே ஒருபோதும் இதுபோன்ற தவறை செய்ய வேண்டாம். மதியம் அரிசி சாதத்தை முடிந்தவரை குறைக்க வேண்டும். மேலும் டயட் இல்லாமல் உடல் எடையை குறைக்க, ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது மட்டும் இல்லாமல் போதுமான அளவு தண்ணீரும் குடிக்க வேண்டும். நீரேற்றமாக இருப்பது உடல் எடையை எளிதில் குறைக்க உதவும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க...காலையில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News