மேற்கு வங்க மாநிலத்தில் முதல் நான்கு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. மேற்குக் வங்க மாநிலத்தில் அடுத்தக்கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று Basirhat Dakshin என்ற இடத்தில் அமித் ஷா கலந்துக் கொண்ட பேரணியில் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கிப் பேசினார். தன்னை பதவி விலகச் சொன்ன மம்தா பானர்ஜிக்கு தக்க பதிலடி கொடுத்த அமித் ஷா, நான் எப்போது பதவி விலகுவேன் தெரியுமா என்று எதிர்கேள்வி கேட்டு பதிலடி கொடுத்தார்.


மத்திய ரிசர்வ் போலிஸ் படையினரிடமிருந்து (சிஆர்பிஎஃப்) துப்பாக்கிகளைப் பறிக்க மக்களைத் தூண்டியது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.



சனிக்கிழமை கூச் பிஹாரில் துப்பாக்கிச் சூடு நடைபெற மம்தா பானர்ஜியின் தூண்டுதலே வழிவகுத்ததாக அமித் ஷா குற்றம் சாட்டுகிறார். துப்குரியில் (Dhupguri) ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார் அமித் ஷா.


"நான்காவது கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற போது, மக்களைத் தூண்டிய மம்தா பானர்ஜி, சிஆர்பிஎஃப் (CRPF) படையினரை சுற்றி வளைக்கச் சொன்னார். பாதுகாப்புப் படையினரிடம் இருந்து ஆயுதங்கள் பறிக்கப்பட்டன. துப்பாக்கியில் தோட்டாக்கள் இருந்தன, இந்த சூழ்நிலையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்தனர். தீ்தி என்று அழைக்கப்படும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களைத் தூண்டவில்லை என்றால் அவர்கள் இறந்திருக்க மாட்டார்கள்" என்று அமித் ஷா மம்தா பானர்ஜியை நேரடியாக சாடினார்.


Also Read | தேர்தல் பிரசாரம் செய்ய மம்தா பானர்ஜிக்கு 24 மணி நேரத் தடை


இந்த வன்முறை சம்பவத்தில் ஐந்தாவது நபரும் இறந்துவிட்டார். ஒரு இளைஞர், ஆனந்த் பர்மன் வாக்களிக்கச் சென்றிருந்தார், ஆனால் டி.எம்.சி குண்டர்கள் அவரை சுட்டுக் கொன்றனர். தீதி நான்கு பேரைப் பற்றி பேசுகிறார் ஆனால் ஆனந்த் பர்மன் பற்றி ஏன் எதுவும் குறிப்பிடவில்லை. ஏன்? ஏனென்றால் அவர் தீதியின் வாக்கு வங்கியின் ஒரு பகுதியாக இல்லாத ராஜ்போங்ஷி சமூகத்தைச் சேர்ந்தவர்"என்று உள்துறை அமைச்சர் குறைகூறினார். 



பாரதிய ஜனதா கட்சியை மம்தா பானர்ஜி விமர்சிப்பது அவருக்கு எந்தவித பயனையும் தராது என்று அமித் ஷா காட்டமாக கூறினார். "தீதி (Mamata Banerjee) தவறான முறையில் பாஜக தொடர்பாக துஷ்பிரயோகம் செய்கிறார். பாஜக (Bharatiya Janata Party)  உங்களுக்கு எதிராக போட்டியிடுகிறது. மேற்கு வங்கத்தின் தாய்மார்கள், சகோதரிகள், ராஜ்போங்ஷி சமூகம், கோர்கா சமூகம், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், உங்களுக்கு எதிராக போட்டியிடும் விவசாயிகள் என அனைவரும் பாரதிய ஜனதா கட்சியின் தரப்பில் இருக்கின்றனர்" என்று அமித் ஷா சாடினார்.


Also Read | குரானின் வசனங்கள் சட்டத்தை மீறுகிறதா? உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன?


"தீதியின் பேச்சுகளை நீங்கள் கேட்டால், அவர் என்னைப் பற்றியே அதிகம் பேசுகிறார் என்பதை சுலபமாக தெரிந்துக் கொள்ளலாம். அவர் மாநிலத்தைப் பற்றி பேசுவதை விட, அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்வதிலே குறியாக இருக்கிறார்'என்று கேட்கிறார்.


மேற்கு வங்க மக்கள் இதே கேள்வியை என்னிடம் கேட்கும் நாளில் நான் ராஜினாமா செய்வேன். ஆனால் மே 2 ம் தேதி நீங்கள் ராஜினாமா செய்ய நீங்கள் தயாராக இருங்கள்" என்று அமித் ஷா தனது பிரசாரத்தில் தெரிவித்தார். 


மேற்கு வங்கத்தில் பாஜக அரசாங்கத்தை அமைப்பது மட்டுமல்ல, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.


Also Read | மியான்மர் போராட்டங்களில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் காரணம் என்ன?


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR