டெல்லி கிழக்கு மக்களவையில் வரலாறு வெற்றி பெற்ற கவுத்தம் கம்பீர் தனது வெற்றி, மோடியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுத்தம் கம்பீர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அரவிந்தர் சிங் லவ்ளி, ஆம் ஆத்மி வேட்பாளர் ஆத்திஷி மெர்லினாவை கனிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்று முதன்முறையாக மக்களவையில் காலடி எடுத்து வைக்கின்றார்.


இந்நிலையில் தனது தேர்தல் வெற்றியை அடுத்து இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது வெற்றி குறித்து தெரிவிக்கையில்., "என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி., தற்போது பாஜக-விற்கு கிடைத்துள்ள வெற்றி பிரதமர் மோடியின் ஐந்து ஆண்டுகாள ஆட்சிக்கு கிடைத்த வெற்றி, அவரது ஆளுமைக்கு கிடைத்த வெற்றி. கடின உழைப்புடன் நேர்மை சேர்ந்தால் என்னவாகும் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளது" என தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர் எதிர்மறையான அரசியலுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர். நான் காங்கிரஸ் கட்யினருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்., மற்றவர்களின் மீது குறை கூறுவதை விட்டுவிட்டு நம் மீது உள்ள குறைகளை நிவர்ச்சி செய்தால் மட்டுமே அடுத்த முறையாவது ஆட்சிக்கு வரமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் உலக கோப்பை குறித்து பேசிய அவர்., கிரிக்கெட் ஆட்டக்காரர் ஒவ்வொருவருக்கும் உலக கோப்பை பெறுவது கனவு ஆகும். தற்போது உலக கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு அந்த கனவு நினைவாக வேண்டும் என வாழ்த்துகிறேன். 2011-ல் நடந்தது 2019-லும் நடைபெற வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என முடித்துள்ளார்.