மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெற்று மீண்டும் 2-வது முறையாக முதல்வராக வருவேன் என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநில அரசுகளின் ஆட்சிக்காலம் நவம்பரில் முடிவடையும் நிலையில், அம்மாநிலங்களில் தேர்தல் தேதி தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று, இம்மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியினை அறிவித்தார். 


இந்த அறிவிப்பின் படி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தலும், 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைப்பெறும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.


இந்நிலையில், மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவிக்கையில்., ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.  அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


ஜனநாயகத்தில், மக்கள் அரசாங்கத்தை கேள்வி கேட்கிறார்கள் மற்றும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர், சிறப்பான வெற்றியைப் பெற்று மீண்டும் 2-வது முறையாக நான் முதல் மந்திரியாக வருவேன். இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். பாஜக - சிவசேனா கூட்டணி தொகுதி ஒதுக்கீடு இரண்டு நாளில் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.