நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இன்று இரவுக்குள் தேர்தல் முடிவு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது வரை வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் 51 தொகுதிகளில்தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 95 முதல் 100 இடங்கள் கிடைக்கும் நிலை உள்ளது.


பாஜக சுமார் 350 இடங்களில் முன்னிலை பெற்றதன் மூலம் மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. இதன் மூலம் மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார். பதவி ஏற்பு விழா அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தநிலையில், நமது அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், தேர்தலில் வெற்றியை நோக்கி நகரும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.


அவர் கூறியது, "தெற்காசியாவின் அமைதி, வளர்ச்சி மற்றும் வளத்திற்காக பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.