வருங்காலங்களில் ஆந்திர அரசு ஒரு புரட்சிகரமான அரசாக இருக்கும்!!
நான் யாருக்கு எதிராகவும் செயல்படமாட்டேன்; மக்களின் பாதுகாவலனாக இருப்பதே என் கடமை என ஜெகன்மோகன் ரெட்டி உறுதி!!
நான் யாருக்கு எதிராகவும் செயல்படமாட்டேன்; மக்களின் பாதுகாவலனாக இருப்பதே என் கடமை என ஜெகன்மோகன் ரெட்டி உறுதி!!
ஆந்திராவில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. ஆந்திர முதலமைச்சராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வரும் 30ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில் இன்று காலை டெல்லி சென்ற அவர், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் வரும் 30ம் தேதி நடைபெறவுள்ள தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறும் பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார். அப்போது விஜய சாய் ரெட்டி உள்ளிட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களும் உடனிருந்தனர்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில்; வருங்காலங்களில் ஆந்திர அரசு ஒரு புரட்சிகரமான அரசாக இருக்கும் என்பது உறுதி. நான் யாருக்கு எதிராகவும் செயல்படமாட்டேன்; மக்களின் பாதுகாவலனாக இருப்பதே என் கடமை எனவும் அவர் கூறினார்.
மேலும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது பற்றி பிரதமர் மோடியிடம் தொடர்ந்து வலியுறுத்துவேன். ஆந்திராவை ஓராண்டிற்குள் நாட்டின் முன்மதரியான மாநிலமாக மாற்றிக்கடுவேன் என அவர் தெரிவித்தார்.