கர்நாடக மாநிலம் தும்கூரு தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடா படுதோல்வி அடைந்தார், எனவே அவரை ஹாசனை தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என அவரது பேரன் விரப்பம் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது சொந்த தொகுதியான ஹாசன் தொகுதியை தவிர்த்து தும்கூறு தொகுதியில் போட்டியிட்டார். மேலும் தனது சொந்த தொகுதியான ஹாசனை பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு விட்டுக்கொடுத்தார். ஆனால் ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள் மற்றும் காங்கிரசார் அழுத்தம் கொடுத்ததை அடுத்து தேவேகவுடா, துமகூரு தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் போட்டியிட்டார்.


இத்தொகுதியில் அவர் வெற்றி பெறுவார் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறின. ஆனால் அனைவரது எதிர்பார்ப்பினையும் பொய்யாக்கும் விதமாக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சிகள் பலம் வாய்ந்த அந்த தொகுதியில் தேவேகவுடா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுமார் 12 ஆயிரம் ஓட்டுகள் வித்திசாயத்தில் வெற்றி பெற்றார்.


ஆனால் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.  


இதற்கு முன்பு 1999-ஆம் ஆண்டு நடைப்பெற்ற பொதுத்தேர்தலில் தேவேகவுடா தோல்வி அடைந்திருந்தார். தற்போது இது அவருக்கு 2-வது தோல்வி ஆகும். மேலும் கர்நாடகத்தில் ஜனதா தளம் கட்சியும், கூட்டணி கட்சியான காங்கிரசும் படுதோல்வி அடைந்ததால் தேவேகவுடா மிகவும் விரக்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


இதற்கிடையில் தேவகவுடா அவர்களின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா கூறுகையில், மதசார்பற்ற ஜனதா தள தொண்டர்களின் நம்பிக்கையை பெறவும், தேவகவுடா தோல்வியால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவும் எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். ஹசன் தொகுதியில், மீண்டும் தேவகவுடா போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.